முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திட்டப்பணிகளை செயல்படுத்த அமைச்சர் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 23 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.24 - முதல்வர் ஜெயலலிதாவின் எதிர்பார்ப்பின் படி ஆதிதிராவிடர்களின் அனைத்து திட்டப்பணிகளை

விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:_

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஆய்வுக்கூட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்குரிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு 2013_14ஆம் ஆண்டுக்கு ரூ.1406.84 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இத்தொகை மாணவ/ மாணவியர் கல்வி உதவித் தொகை, வீடற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு விலையில்லா வீட்டுமனை வழங்குதல், இணைப்புச்சாலை அமைத்தல், மயானம் மற்றும் மயானப்பாதை அமைத்தல், கல்வி மேம்பாடு மற்றும் விடுதி நிர்வாகம் ஆகியவற்றிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

23.12.2013 அன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என். சுப்ரமணியன் தலைமையில், எழிலகம் இணைப்பு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின்  (இரண்டாம் தளம்) கூட்ட அரங்கில்  ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

மேற்படி  ஆய்வுக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  நலத்துறையின் அரசு செயலர் கண்ணகிபாக்கியநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் சு.சிவசண்முகராஜா, மேலாண்மை இயக்குநர், தாட்கோ சார்பில் செயற்பொறியாளர்,  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் மற்றும் இதர உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர். ஆய்வுக் கூட்டத்தின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் 2013_14ஆம் கல்வி ஆண்டிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் கல்வி உதவித்தொகைக்காக கூடுதலாக வழங்கப்பட்ட ரூ.549.00 கோடியினை சரியான முறையில் தகுதியான  ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிட மாணவ / மாணவியர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும்,  மாணவ / மாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகையை தாமதமின்றி ஒப்பளிப்பு செய்து வழங்கப்பட வேண்டும் என்றும், அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  நல பள்ளி / விடுதிகள்_கட்டிடங்கள் மற்றும் பராமரிப்பு பற்றியும் ஆதிதிராவிடர்கள் சமுதாயக்கூடம் கட்டுவது பற்றியும், விடுதிகளுக்கான நில எடுப்புக்குறித்தும், திட்டங்களை உரிய காலத்தில் முடித்து அதன் பயன்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை சென்றடையும் வகையில் இப்பணிகளை   விரைந்து முடிக்க வேண்டும் என்றும்  அறிவுறுத்தினார்.   

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல குடியிருப்புகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்குதல், இணைப்புச்சாலை, மயானம் மற்றும் மயானப்பாதை மற்றும் அடிப்படை வசதிகள் செய்வதில் முனைப்புடன் திட்டங்களை விரைந்து செயல்படுத்தும்படி அறிவுறுத்தினார்.  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் நல்வாழ்வினை கருத்தில் கொண்டு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து அயராது உழைக்கும் முதல்வர் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையில் அனைத்து திட்டப்பணிகளையும் முனைப்புடன் விரைந்து செயல்படுத்தும்படி அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்