முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

40-வது நினைவு நாள்: பெரியார் சிலைக்கு மரியாதை

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச. 25 - தந்தை பெரியாரின் 40_வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, ரகுபதி, மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், ஆர்.டி.சேகர், சுதர்சனம், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், வி.பி.துரைச்சாமி, கிரிராஜன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன், தனிச் செயலாளர் இளஞ்சேகுவாரா தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் நிர்வாகிகள் எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட செய்தி தொடர்பாளர் வேலுமணி, மார்க்கெட் நாசர், கடம்பன், வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட தலைவர் ஜான், மண்டல அமைப்பு செயலாளர் தனசேகரன் உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago