முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏகே 47 துப்பாக்கியை வடிவமைத்த கலாஸ்னிகோவ் மரணம்

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, டிச.25 - ஏகே 47 எனப்படும் அதிக ரவுண்டுகள் சுடும் பிரபல துப்பாக்கியை வடிவமைத்த ரஷ்ய ராணுவ வீரர் கலாஸ்னிகோவ் மரணமடைந்தார். இரண்டாம் உலக போரின் போது ரஷ்யாவுக்கு வெற்றியை தேடி தந்த புதிய வகை துப்பாக்கியாக விளங்கியது ஏகே 47 துப்பாக்கியை வைத்துள்ளன என்றால் அதன் புகழ் மற்றும் பெருமை ரஷ்யாவை சேர்ந்த மிகைல் கலாஸ்னி கோவ் என்ற ராணுவ வீரரைத்தான் சேரும். 1947ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது இந்த துப்பாக்கி வடிவமைக்கப்பட்டதால், கலாஸ்னிகோவின் பெயரையும் சேர்த்து ஏகே 47 என அழைக்கப்பட்டது. ரஷ்யாவில் உள்ள உரல் மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஸ்கோவில் இருந்து 1300 கி.மீ. தொலைவில் இருக்கும் உத்மர்ட் குடியரசின் தொழில் நகரமான இஸிவிஸ்க் தான் கலாஸ்னி கோவின் சொந்த ஊராகும். இது குறித்து உத்மர்ட் குடியரசின் அதிபர் விக்டர் கல்கோவ் கூறுகையில், கலாஸ்னி கோவ்வுக்கு 94 வயதாகிறது. முதுமை தொடர்பான உடல் குறைவால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டார். ஜூனில் மிகவும் அபாய நிலையை அடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார் என்று தெரிவித்தார். கடந்த 2002ம் ஆண்டு அவரது ஏகே 47 கண்டுபிடிப்பை பாராட்டி ஜெர்மனியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட கலாஸ்னிகோவ் பேசுகையில், ஏகே 47 கண்டுபிடித்ததற்காக நிச்சயம் பெருமை அடைகிறேன். ஆனால் தற்போது அது தீவிரவாதிகளின் கையில் சிக்கி கொண்டதை கண்டு வருத்தம் அடைகிறேன் என்று தெரிவித்திருந்தார். ஏகே 47 துப்பாக்கியை கலாஸ்னிகோவ் வடிவமைத்த போது அவருக்கு வயது வெறும் 20 என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago