முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைவர் நல்லகண்ணுக்கு பிறந்தநாள்: முதல்வர் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.27 - தலைவர் நல்லகண்ணுக்கு பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:_

இன்று (நேற்று) இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தாங்கள் இன்று (நேற்று) 89_வது அகவையில் அடியெடுத்து வைத்துள்ளீர்கள் என்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 

89_வது பிறந்த நாள் காணும் தங்களுக்கு என்னுடைய உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

தாங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், மன உறுதியுடனும்,  நீடூழி வாழ்ந்து தாங்கள் சார்ந்துள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கும், பொது வாழ்வில் தொடர்ந்து <டுபடுவதன் மூலம் நாட்டு மக்களுக்கும்  சிறந்த  தொண்டினை ஆற்றிட  இந்த நன்னாளில் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக்  கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்தி செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்