முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது அணியே மத்தியில் ஆட்சி அமைக்கும்: பாண்டியன்

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

திருவாரூர், டிச.28 - வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இடசாரிக் கட்சிகளின் ஆதரவு பெற்ற 3 வது அணி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி அமைக்கும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன். திருவாரூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் தோல்வியை சந்திக்கும். அதே நேரத்தில், இதற்கு பாரதீய ஜனதா கட்சி மாற்றாகாது. இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு பெற்ற மதச்சார்பற்ற அணி தனி பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் அமரும். இதன்மூலம்  மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனை, அண்டை நாடுகளுடனான சர்ச்சைகள், நதிநீர்ப் பிரச்னை, வளர்ந்து வரும் சமூக கலவரங்கள் ஆகியவற்றுக்கு தீர்வு காண முடியும். தமிழகத்தில் கோமாரி நோய் பாதிப்புகளால் இறந்த கால்நடைகள் குறித்து உரிய கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும். நெல், கரும்பு, பால் போன்ற விவசாயம் சார்ந்த பொருள்களுக்கு கட்டுப்படியாகும் விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். கரும்பு விலையை விவசாயச் சங்கப் பிரநிதிகள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் இணைந்த கூட்டத்தைக் கூட்டி விலை நிர்ணயத்தை அரசு ஏற்படுத்த வேண்டும். திருவாரூர் - காரைக்குடி அகல ரயில்பாதை பணியை உடனே தொடங்க வேண்டும். தமிழகத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அணி சேர்கை என்பது இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை.காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத கட்சிகளுடனேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி அமைக்கும். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் அ.தி.மு.க.வுடனான கூட்டணியில் தொடர்கிறோம் என்றார் தா.பாண்டியன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்