முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் தாவூத் இப்ராகிமுக்கு முதலிடம்

வியாழக்கிழமை, 26 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மே.- 26 - சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் முன்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி தாவூத் இப்ராகிமுக்கு சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. 1993 ம் வருடம் மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்தியாவில் நடந்த முதலாவது தீவிரவாத தாக்குதல் இதுதான். இதில் தொடர்புடைய மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் குண்டு வெடிப்புக்குப்பின் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடிவிட்டான். கராச்சியில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும் அவன் லஷ்கர்இதொய்பா மற்றும் அல்கொய்தா தீவிரவாத இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளான். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனத்தின் தூண்டுதலின் பேரில் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தாவூத் இப்ராகிமை தங்களிடம் எஒப்படைக்குமாறு இந்தியா பலமுறை கேட்டுக்கொண்ட பிறகும் பாகிஸ்தான் தனது நாட்டில் இப்ராகிம் இல்லை என்று கூறுகிறது. தாவூத் இப்ராகிம் சர்வதேச தீவிரவாத பட்டியலில் உள்ளான். பின்லேடன் கொல்லப்பட்டபிறகு தாவூத் இப்ராகிம் தீவிரவாதிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளான். அவன் இந்தியாவில் கள்ளநோட்டு புழக்கத்தை விட்டு இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க திட்டமிட்டிருப்பதாக இந்திய புலனாய்வு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
தற்போது தாவூத் இப்ராகிம் கும்பலைச்சேர்ந்தவர்கள் ஐ.எஸ்.ஐ. உடவியுடன் ஆயுதங்களை வாங்கி குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து பின்லேடனுக்கு பிறகு தாவூத் இப்ராகிம் மீது அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் பார்வை விழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்