முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்.,க்கு எதிரான வழக்கு: நீதிமன்றத் தீர்ப்பு ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2014      இந்தியா
Image Unavailable

 

நியூயார்க், மார்ச் 22 - இந்தியாவில் 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு சீக்கிய உரிமைகள் அமைப்பு  தொடுத்திருந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜரான இந்திய அமெரிக்க வழக்குறைஞர் ரவி பத்ரா, 1984-ஆம் ஆண்டு ஏற்பட்ட அந்த கலவரத்தில் இந்தியாவின் உள்விவகாரம். ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிட முடியாது. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று வாதாடினார். இந்தக் குற்றம் அமெரிக்க நீதிமன்றத்தின் அதிபர் வரம்புக்கு உள்பட்டதில்லை என்றும், சட்ட வரையறை மற்றும் சட்ட நிலைப்பாடு காலாவதியாவதால் சீக்கிய அமைப்பு வழக்கு தொடுக்க இயலாது என்றும் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு காங்கிரஸ் கட்சி தரப்பில் கோரப்பட்டது.

காங்கிரஸ் கட்சியன் அமைப்பு அமெரிக்காவில் இருப்பது, அதன் நிதி திரட்டும் நடவடிக்கைகள் ஆகியவை அமெரிக்க நீதிமன்றத்துக்கு அக்கட்சி தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரத்தை அளிப்பதாக சீக்கிய அமைப்பின் சார்பில் வாதாடப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கை அடிப்படையாகக் கொணம்டு சீக்கியர்களின் வழக்கை நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல், அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ரவி பத்ரா வாதாடினார்.

அதையடுத்து நீதிபது ராபர்ட்ஸ்வீட் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்