முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூதரின் மகள் கைது - அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 31 மே 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மே 31 - தூதரின் மகள் தவறுதலாக கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்திய தூதர் அலுவலகத்தில் துணை தூதராக பணிபுரிந்துவருபவர் தேபஷிஸ் பிஸ்வாஸ்.  இவரது மகள் கிருத்திகா வயது18. இவர் நியூயார்க் நகரில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் படித்துவருகிறார். 

பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு ஆபாச இமெயில்கள் அனுப்பியதாக கூறப்பட்ட புகாரில் மாணவி கிருத்திகா தவறுதலாக கைது செய்யப்பட்டு 24 மணி நேரம் சிறைவைக்கப்பட்டார். பின்னர் அவர் தவறுசெய்யவில்லை என்று தெரியவந்ததும், கிருத்திகா விடுதலை செய்யப்பட்டார். 

தூதரக அதிகாரியின் மகள் என்றும் பாராமல் செய்யாத குற்றத்திற்காக தண்டனை வழங்கப்பட்ட கிருத்திகா ரூ. 7 கோடி நஷ்ட ஈடு கோரி நியூயார்க் நகர நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் அமெரிக்காவிற்கான இந்திய தூதர் மீராசங்கர் இந்திய தூதரின் மகள் தவறுதலாக கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்காவிற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து இருப்பதாக தெரிவித்தார். 

இந்திய தூதரகம் இந்த விவகாரத்தை மிகவும் கடுமையாக கருதுகிறது. கிருத்திகா கைது செய்யப்பட்ட தகவல் இரவில்தான் கிடைத்தது. அவருடைய விடுதலைக்காக இரவு முழுவதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தூங்கிக்கொண்டிருந்த அமெரிக்க அதிகாரிகளை எழுப்பி காலையில் கிருத்திகாவின் விடுதலைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago