முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படப்பிடிப்பில் விபத்து - நடிகர் ராஜசேகருக்கு ஆபரேஷன்

புதன்கிழமை, 1 ஜூன் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை.ஜூன்.1 - 1 சென்னையில் நடந்த படப்பிடிப்பில் நடிகர் ராஜசேகர் படுகாயமடைந்தார். உடனடியாக அப்போலோ மருத்துவமனையில் ஆபரேஷந் நடந்தது. 

இது குறித்த விபரம் வருமாறு: இது தாண்டா போலீஸ் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் ராஜசேகர். இவர் எம்.பி. பி.எஸ். படித்த டாக்டர். ஏராளமான தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ராஜசேகர் மனைவி நடிகை ஜீவிதா. தற்போது இது தாண்டா போலீஸ் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதிலும் ராஜசேகரே நாயகனாக நடிக்கிறார். இப் படத்தை ஜீவிதா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையில் சண்டைக் காட்சியை எடுத்தனர். ராஜசேகர் வேகமாக ஓடி வந்து வில்லன்களை அடிப்பது போன்ற காட்சி படமானது. அப்போது ராஜசேகர் கால் இடறி கீழே விழுந்தார். இதில் அவரது கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு கையில் நேற்று ஆபரேஷன் நடந்தது.

 இது பற்றி நடிகை ஜீவிதாநிருபரிடம் கூறும் போது அனஸ்திசியா எடுத்து அறுவை சிகிச்சை செய்து கொள்வது ராஜசேகருக்கு பிடிக்காது. ஆனாலும் டாக்டர்கள் வற்புறுத்தலுக்கு இணங்ககையில் நேற்று ஆபரேஷன் நடந்தது. காலில் ஆபரேஷன் செய்வது பிறகு முடிவு எடுக்கப்படும். முகத்திலும் காயங்கள் உள்ளன. அதற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யலாமா என்று ஆலோசித்து வருகிறோம் என்றார். ராஜசேகர் சகோதரர் நடிகர் செல்வா கூறும் போது ஆபரேஷன் முடிந்ததும் டிஸ்சார்ஜ் செய்து ஐதராபாத்துக்கு அழைத்துப் போய் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்து மேல் சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!