முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீசில் ஆதாரங்களை ஒப்படைத்தார் விஜயலட்சுமி

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன்.5 - இயக்குநர் சீமானுக்கும் தனக்கும் நடந்த செல்போன் உரையாடல், எஸ்.எம்.எஸ். ஆதாரங்களை நடிகை விஜயலட்சுமி போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து போலீசார் சீமானிடம் விசாரணை நடத்த உள்ளனர்.இதுபற்றி விபரம் வருமாறு:-

இயக்குநர் சீமான் தன்னிடம் நெருங்கி பழகி திருமணம் செய்வதாக கூறி மறுத்துவிட்டார் என கமிஷனர் திரிபாதியிடம் நடிகை விஜயலட்சுமி புகார் ஒன்றை கடந்த வாரம் அளித்தார்.

அந்த புகார் வளசரவாக்கம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. ஆய்வாளர் ஜீவானந்தம் வழக்கை விசாரித்தார். நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் நடத்திய விசாரணை அடிப்படையில் இயக்குநர் சீமான் மீது ஏமாற்றுதல், மோசடி, கற்பழிப்பு, கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை சட்டம் உட்பட 6 பிரிவுகளில் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

இந்த குற்றசாட்டை சீமான் தரப்பு மறுத்து விஜயலட்சுமி மீது வழக்கு போடுவதாக கூறினர். இதனிடையே இந்த விவாகரத்தில் புதிய திருப்பமாக நடிகை விஜயலட்சுமி சீமான் தன்னுடன் பேசிய செல்போன் உரையாடல்கள், எஸ்.எம்.எஸ். தகவல்களை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதன் மூலம் இந்த விவகாரம் மேலும் சூடு பிடித்துள்ளது. இதுபற்றி இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை அதிகாரி ஒருவர் செல்போன் பேச்சுக்கள் எஸ்.எம்.எஸ். ஆதாரங்கள் அடிப்படையில் சீமானிடம் விசாரணை நடத்துவோம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!