முக்கிய செய்திகள்

மெட்ரோ ரெயில் திட்டம் கைவிடப்படவில்லை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.- 9 - மோனோ ரெயில் திட்ட பணிகளுக்காக மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் கைவிடப் படவில்லை மோனோ ரெயில் திட்டம் குறைந்த காலத்தில் நிறைவேறும் திட்டம் என்று மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் பேசுகையில், மோனோ ரெயில் திட்டத்தை நிறைவேற்ற மெட்ரோ ரெயில் திட்டம் கைவிடபடுவதாகவும் மோனோ ரெயில் திட்டத்தை கொண்டு வந்த ஜப்பானிலேயே 7 கி.மீ. தூரம் மட்டுமே இயக்கப்படுவதாகவும் மற்ற மேலை நாடுகளில் மோனோ ரெயில் திட்டத்தை கைவிட்ட நிலையில் தமிழகத்தில் 300 கி.மீ. தொலைவுக்கு முதலிலும் பிறகு போக போக அதிகரிக்கப்படுகிறது என்று பேசியபோது குறுக்கீட்டு பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது:-

மோனோ ரெயில் திட்டத்தை அறிமுகப்படுத்தியதால் மெட்ரோ ரெயில் திட்டத்தை கைவிட்டு விட்டதுபோல் உறுப்பினர் பேசுகிறார் மோனோ ரெயில் திட்டத்தை அறிமுகப்படுத்துவதால் மெட்ரோ ரெயில் திட்டத்தை கைவிடவில்லை. பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக குறுகிய காலத்தில் நிறைவேற்றப்படுவதே மோனோ ரெயில் திட்டம். தோல்வி அடைந்த திட்டமாக தவறான தகவல்களை தருகிறார். ஐரோப்பிய நாடுகளில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நிறைவேற நாளாகலாம் மோனோ ரெயில் குறுகிய காலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவே மோனோ ரெயில் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: