முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் பலியாவதற்கு ஒபாமா வருத்தம்

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூன் 10 - ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகளின் நடவடிக்கைகளின்போது அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாவதற்கு அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா வருத்தம் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்திற்கு எதிரான போரை நடத்திய அமெரிக்கா, அந்நாட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அங்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பன்னாட்டு படைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் மறைந்திருக்கும் தலிபான் தீவிரவாதிகளும் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தலிபான் தாக்குதலை முறியடிக்க ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் தலிபான் நிலைகளை நோக்கி தரைத் தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றது. 

இப்படிப்பட்ட தாக்குதல்களின்போது ஆப்கானிஸ்தானில் உள்ள அப்பாவி பொதுமக்கள் பலரும் பலியாகி வருகிறார்கள். இதற்கு ஆப்கானிஸ்தான் அரசாங்கம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் மறைந்திருந்த அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அந்நாட்டின் அனுமதியை கேட்காமலேயே அமெரிக்க அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர். இதற்கு அல் கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகள் பதிலடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். தலிபான்களின் இந்த தாக்குதலை முறியடிக்க சமீபத்தில் ஹெல்மாண்டு மாகாணத்தில் அமெரிக்க விமானப் படையினர்  நடத்திய தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாயிடம் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தொலைபேசியில் தெரிவித்தார். ஒபாமா வருத்தம் தெரிவித்த செய்தியை வெள்ளை மாளிகையின் ஊடகத் துறை அமைச்சர் ஜெய் கார்னி தெரிவித்தார். வீடியோ கான்பரன்சிங் மூலம் ஒபாமாவும், கர்சாயும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உரையாடியதாகவும் கார்னி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்