முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனா அணைகட்டுவதால் பயம் இல்லை: எஸ்.எம். கிருஷ்ணா

புதன்கிழமை, 15 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.15 - பிரமபுத்திரா நதியின் குறுக்கே சீனா அணை கட்டுவதால் தற்போது பயப்படத்தேவையில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 

இமயமலையில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ள திபெத்தின் தென்மேற்கு பிரமபுத்திரா நதி உற்பத்தியாகி அசாம் மாநிலம் வழியாக ஓடி வங்கக்கடலை அடைகிறது. இதனால் இந்தியால் பல லட்சம் ஏக்கர் பாசன வசதி பெருகிறது. மேலும் கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. சுற்றுச்சூழலை பாதுகாத்து வருகிறது. இந்தநிலையில் பிரமபுத்திரா நதியின் குறுக்கே சீனா பல்வேறு அணைகளை கட்டி வருகிறது. அதனால் எதிர்காலத்தில் பிரமபுத்திரா நதியை சீனா தன் நாட்டு பக்கம் திருப்பிவிட வாய்ப்பு உள்ளது என்ற பிரச்சினை உருவாகி உள்ளது. 

இந்தநிலையில் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம், பிரமபுத்திரா நதியின் குறுக்கே சீனா அணைகள் கட்டி வருவது குறித்து நிருபர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். இதற்கு பதில் அளித்த கிருஷ்ணா, பிரமபுத்திரா நதியில் சீனா அணைகள் கட்டுவதால் உடனடியாக பயம் எதுவும் இல்லை. மின்சார உற்பத்திக்காக இந்த அணைகள் கட்டப்படுகின்றன. அந்த அணைகளில் தண்ணீர் தேக்கப்படாது என்பது குறித்து தகவல் அறிந்துள்ளோம் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago