முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணிபுரியும் இடங்களில் வசிக்காத வி.ஏ.ஓக்கள் மீது நடவடிக்கை

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜூன்.18 - பணிபுரியும் கிராமங்களிலேயே வசிக்காத கிராம நிர்வாக அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் கபிலர் மலையை சேர்ந்த கே.எஸ். விவேகானந்தன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் வி.ஏ.ஓக்கள் எந்த கிராமத்தில் பணிபுரிகிறார்களோ, அதே கிராமத்தில்தான் வசிக்க வேண்டும் என்பது விதி. வருவாய் ஆவணங்களை பராமரிப்பது, நில வரி உள்ளிட்ட வரி வசூல்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு, ஜாதி சான்று, உள்ளிட்டவை குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவது உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை செய்ய வேண்டியவர்கள் வி.ஏ.ஓக்கள் ஆவர். 

ஆனால் பெரும்பாலான வி.ஏ.ஓக்கள் நகர் பகுதிகளில் வசிப்பதால் மக்களுக்கான பணிகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றன. எனவே பணிபுரியும் கிராமத்திலேயே வி.ஏ.ஓக்கள் வசிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வி.ஏ.ஓக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களில் பலர் பணிபுரியும் கிராமங்களில் வசிப்பதில்லை. மாதத்தில் சில நாட்கள் மட்டுமே தாங்கள் பணிபுரியும் கிராமங்களுக்கு சென்று வருகின்றனர். கிராமங்களிலியே வசிக்காத வி.ஏ.ஓக்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

மேலும் அவர் பணிபுரியும் கிராமத்தில்தான் வசிக்கிறாரா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்காத வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மாவட்ட கலெக்டர்கள் முதல் வி.ஏ.ஓக்கள் வரை அனைவருக்கும் உடனடியாக தெரியப்படுத்திட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்