முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வில்லிவாக்கம் சிட்கோ நகரில் ரேஷன் கடையில் அமைச்சர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி சோதனை

சனிக்கிழமை, 25 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 25-​ வில்லிவாக்கம் சிட்கோ நகரில் கூட்டுறவு ரேஷன் கடை உள்ளது. இங்கு அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நேற்று திடீர் ஆய்வு செய்தார். கடைக்குள் சென்று ரேஷன் அரிசியின் தரத்தை சோதித்து பார்த்தார்.   சரியான அளவில் எடை குறைவு இல்லாமல் பொருட் களை வழங்கவேண்டும் என்று ஊழியரை அவர் அறிவுறுத்தினார். பொதுமக்களிடம் இருந்து எந்தவித புகாரும் வராத வகையில் செயல்படவேண்டும் என்று முதல்​அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நியாய விலைக்கடை ஊழியர்கள் தங்கள் பணிகளை ஆற்றவேண்டும் என்று எச்சரித்தார். பொருட்கள் வாங்க வந்திருந்த பொதுமக்களிடமும் குறைகள் ஏதாவது உள்ளதா என்று கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பலராமன் தெருவில் தொழு நோயால் பாதிக்கப்பட்ட 119 குடும்பங்களுக்கு புதிதாக அமைக்கப்படும் பகுதி நேர ரேஷன் கடையை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது வில்லிவாக்கம் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் உணவு வழங்கல் மற்றும் பாதுகாப்புத்துறை ஆணையா ளர் க. பாலசந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்