முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்படமாட்டாது-ப.சிதம்பரம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 7 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.- 7 - ஆந்திர மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்படமாட்டாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலத்தை விரைவில் அமைக்கக்கோரி மீண்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தனி தெலிங்கானா மாநிலத்தை ஆதரித்து அந்த பகுதியில் உள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்லாது அந்த தெலுங்கானா ராஷ்ட்ரீய கட்சி எம்.பி.க்களும் எம்.எல்.ஏ.க்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துவிட்டனர். இதனால் ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை. தெலுங்கானா பகுதி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் ராஜினாமா செய்திருப்பது கவலை அளிக்கிறது. தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வுகாண மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஜம்மு-காஷ்மீர் மாநில நிலைமை குறித்து மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. அந்த மாநிலத்தில் கடந்த 6 மாதங்களாக குறிப்பிடத்தக்க வகையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. மேற்குவங்க மாநிலத்தில் உள்ளு புருலியாவில் ஆயுதங்கள் குவிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியை இந்தியாவுக்கு அனுப்ப டென்மார்க் மறுத்து வருகிறது. குற்றவாளியை இந்தியாவுக்கு கொண்டுவர தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ப.சிதம்பரம் மேலும் கூறினார். இதற்கிடையில் தனி தெலுங்கானா மாநிலத்தை வலியுறுத்தி நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் போராட்டம் தெலுங்கானா பகுதியில் மட்டுமல்லாது ஆந்திராவில் பரவியது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்