முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனித் தெலுங்கானா: 14 ம் தேதி ரயில் மறியல்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்,ஜூலை.- 11 - தனித் தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி வரும் 14 ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கூட்டுப் போராட்டக் குழு அறிவித்துள்ளது.  இது தொடர்பாக கூட்டுகுழுவின் தலைவர் கோதண்டராம் ஐதராபாத்தில் கூறியதாவது, தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி நடைபெற்று வரும் போராட்டத்தை இந்த மண்டலத்தின் எல்லா மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் 12 ம் தேதி தெலுங்கானா மாவட்டங்களில் நெடுஞ்சாலைகளில் சமையல் செய்யும் போராட்டம் நடத்தப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து 14 ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். ஐதராபாத் நகரை தவிர மற்ற மாவட்டங்களில் இப்போராட்டங்கள் நடைபெறும்.
மேலும் ஆகஸ்ட் 1 ம் தேதி தெலுங்கானா மாவட்டங்களில் பொது வேலை நிறுத்தம் நடத்தப்படும். அன்று முதல் அரசு ஊழியர்களும் போராட்டத்தில் குதிக்கிறார்கள். இதையடுத்து பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீசை அரசிடம் 13 ம் தேதி அளிக்கவுள்ளன. இந்த வேலை நிறுத்தத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களும், பொதுத்துறை நிறுவனமான சிங்கரேனி நிலக்கரி சுரங்க தொழிலாளர்களும் ஈடுபடுவார்கள். போராட்டங்களுக்கு பொதுமக்களின் ஆதரவை திரட்ட தெலுங்கானா பிராந்தியத்தில் ஆர்ப்பாட்டங்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்கள் இனி அரசு பணியில் ஈடுபடாமல் புறக்கணிக்க வேண்டும் என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!