முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைஞர் டி.வி.க்கு உதவிய 19 கம்பெனிகள்...!

புதன்கிழமை, 13 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.13 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் லாபம் அடைந்ததாக கூறப்படும் ஸ்வான் தகவல் தொடர்பு கம்பெனியில் இருந்து ரூ.214 கோடி கலைஞர் டி.வி.க்கு கைமாறியதை திருப்பி கொடுப்பதில் கொல்கத்தாவில் உள்ள 19 கம்பெனி நிதி உதவி செய்திருப்பதாக கூறப்படுவது வருமானவரித்துறையின் கவனத்தில் வந்துள்ளது. 

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் ஆதாயம் அடைந்த கம்பெனிகளில் ஸ்வான் தகவல்தொடர்பு கம்பெனியும் ஒன்று என்று சி.பி. ஐ. குற்றஞ்சாட்டியுள்ளது. ஆதாயம் அடைந்ததற்காக இந்த கம்பெனியானது ரூ.214 கோடியை கலைஞர் டி.வி.க்கு கொடுத்துள்ளது. சினியுக் கம்பெனி மூலம் இந்த பணம் கலைஞர் டி.வி.க்கு கைமாறியுள்ளது. இதுதொடர்பாக ஸ்வான் நிறுவனர் பல்வா,சினியுக் நிறுவனர் கரீம் மொரானி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ரூ.1.76 லட்சம் கோடி 2 ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியவுடன் ஸ்வான் கம்பெனியிடம் பெற்ற ரூ. 214 கோடியை கடனாக காட்டி அதை திருப்பி அடைக்கும் முயற்சியில் கலைஞர் டி.வி. முயற்சிகளை மேற்கொண்டியிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த ரூ.214 கோடியை வெவ்வேறு நிறுவனங்கள் மூலமாக கலைஞர் டி.வி. பெற்று அதை திருப்பி செலுத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது. கொல்கத்தாவில் பிரபலமில்லாத 19 கம்பெனிகளிடமிருந்து கலைஞர் டி.வி.யானது முதலீடாக பணம் பெற்று அதை ஸ்வான் கம்பெனிக்கு அனுப்பியிருப்பது வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையில் தெரியவந்துள்ளது. கலைஞர் டி.வி.யானது 214 கோடியை திருப்பி செலுத்துவதற்காக கொல்கத்தாவில் உள்ள 19 கம்பெனிகளில் ரூ.52.20 கோடியை கலைஞர் டி.வி. பெற்றுள்ளது. இந்த பணமானது சபையர் மீடியா மற்றும் இன்பிராஸ்ட்ரக்சர் மூலம் கலைஞர் டி.வி.க்கு வந்துள்ளது. மேலும் இந்த கம்பெனியானது அஞ்சுகம் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்டுக்கு ரூ.83 கோடி கடனாக கொடுத்துள்ளது. மேலும் கலைஞர் டி.வி.யானது 214 கோடியை திருப்பி செலுத்தவும் இந்த கம்பெனி ரூ.69.61 கோடியை கொடுத்திருப்பதும் வருமானவரித்துறையினர் சோதனையில் தெரியவந்துள்ளது. 

கலைஞர் டி.வி.யில் 80 சதவீத பங்கு கருணாநிதி குடும்பத்திற்கு உள்ளது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியுடவுடன் ஸ்வான் கம்பெனியில் இருந்து சினியுக் கம்பெனி மூலம் ரூ.214 கோடி கடனாக பெற்றதை கலைஞர் டி.வி. திருப்பி செலுத்த தீவிரம் காட்டியுள்ளது. அதாவது தொழிலுக்காக இந்த ரூ.214 கோடி கடனாக வாங்கப்பட்டது என்றும் அதை வட்டியுடன் திருப்பி செலுத்திவிட்டோம் என்பதை காட்டுவதற்காகவும் இந்த நடவடிக்கையில் கலைஞர் டி.வி. ஈடுபட்டுள்ளது என்றும் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.214 கோடியை திருப்பி செலுத்த கொல்கத்தாவில் உள்ள 19 கம்பெனிகளில் தி.மு.க. பெற்றிருப்பது தற்போது வருமான வரித்துறையினர் சோதனையில் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்