முக்கிய செய்திகள்

இலவச லேப் டாப்: முதல்வருக்கு அ.தி.மு.க. மாணவரணி நன்றி

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜூலை - 21  - மாணவர்களுக்கு இலவச லேப் டாப் அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு  அ.தி.மு.க. மாணவர் அணி நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.

 முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கினங்க அ.தி.முக. மாணவரனி சார்பாக நடைபெற்ற மாவட்ட மாணவரணி செயலாளர்கள் ஆலோசனை கூட்ட ம் மாணவரணி மாநில செயலாளர் மற்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில்  நடைபெற்றது. 

 அ.தி.மு.க. மாணவரணி கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

உலகத்தை ஆளுகின்ற ஆற்றல் கொண்டிருக்கின்ற இந்திய திருநாட்டின் வழிகாட்டி, வாழும் மனித தெய்வம் மாணவ சமுதாயத்தின் காவல் தெய்வம், பள்ளி, கல்லுரிகள் பல தொடங்கி மாணவ சமுதாயத்தின் கல்விக்கண் திறந்திட்ட பெண் பெருந்தலைவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சர் அரியணையில் அமர்த்தி ஜனநாயகத்தை மலரச் செய்து பணநாயகத்தை வீழ்த்திட்ட தமிழக வாக்காள பெருமக்களுக்கு அ.தி.மு.க. மாணவரணி நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவிக்கின்றது.

தங்களின் குடும்ப வருமானத்தை மட்டுமே கொள்கையாக கொண்டு இலவச திட்டங்கள் என்ற பெயரில் நாட்டு வருமானத்தை கொள்ளையடித்த அரசியல் வியாபாரி கருணாநிதியின் சூழச்சிகளையெல்லாம் தூள் துளாக தகர்த்தெறிந்து, அறிவாற்றலில் வல்லரசு நாடுகளுக்கும் வழி காட்டுகின்ற வகையிலே அன்னை தமிழகத்தின் மாணவ சமுதாயத்தை உருவாக்கிட உலகத்திற்கே முன்னோடி திட்டமாக பள்ளி,  கல்லுரி மாணவ, மாணவியர்க்கு இலவச லேப்டாப் (மடிகணினி) வழங்குகின்ற உன்னத திட்டத்தினை அறிவித்து அகிலத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்திட்ட ஆற்றலின் பிறப்பிடமே!   தங்களின் பொற்பாதங்கள் பணிந்து வணங்கி கோடான கோடி நன்றி மலர்களை மாணவரணி காணிக்கையாக்குகின்றது. கடந்த கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் சுயநலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்ற திட்டங்களை மட்டுமே அறிவித்து தமிழகத்தை சீரழித்து வந்த திருக்குவளை தீயசக்தி கருணாநிதி ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தின் ஒளிமயமான எதிர்காலத்தை பாழ்படுத்திடும் வகையிலே சமச்சீர் கல்வி என்று கருணாநிதியின் புகழை மட்டுமே பாடுகின்ற,  பிழைகளை மட்டுமே பாடமாக கொண்டிருக்கின்ற, கருணாநிதியின் கற்பனை கல்வியை மாணவ சமுதாயத்திடம் புகுத்திட கருணாநிதி செய்திட்ட சூழ்ச்சிகளையெல்லாம் தன் மதிநுட்பத்தாலும், தொலை நோக்கு சிந்தனையாலும், ஆழ்ந்த அறிவாற்றலாலும், முறியடித்து உலக தரத்திலான உன்னத கல்வியை,   அகிலம் போற்றும் அற்புத கல்வியை, தரணி போற்றும் தரமான கல்வியை தாய் தமிழகத்தின் மாணவ சமுதாயத்திற்கு வழங்கிட வேண்டுமென்று வீர சபதமேற்று தியாக வேள்வி நடத்திக்கொண்டிருக்கின்ற தெய்வத் தலைவியே! சமச்சீர் கல்வியை சீர்திருத்திட சட்ட திருத்தம் செய்து ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தின் வாழ்வில் ஒளியேற்றி வைத்திட்ட தங்களின் தன்னலமற்ற தலைமையின் பின்னால் அலைகடலென ஆர்ப்பரித்து அணிவகுத்து நிற்கின்றது ஒட்டு மொத்த மாணவ சமுதாயம். தங்களின் மேலான ஆணையை பெற்று கழக மாணவரணியின் சார்பாக பள்ளிகள் தோறும் சென்று வாயிற் கூட்டங்கள் நடத்தி மாணவ  மாணவியர்களை சந்தித்து, கருணாநிதியின் புகழ்பாடும், பிழைகளை மட்டுமே பாடமாக கொண்டிருக்கின்ற கருணாநிதியின் கற்பனை கல்வியான சமச்சீர் கல்வியை தோலுரித்து காட்டிட, உலக தரத்திலான உன்னத கல்வியை, அகிலம் போற்றும் அற்புத கல்வியை, தரணி போற்றும் தரமான கல்வியை, தாய் தமிழகத்தின் மாணவ சமுதாயத்திற்கு கிடைத்திட வீரசபதம் ஏற்று தியாக வேள்வி நடத்தும் ஜெயலலிதாவின் ஆழ்ந்த அறிவாற்றலையும், மதிநுட்பம் கொண்ட தொலை நோக்கு சிந்தனையுடன் மேற்கொண்டிருக்கின்ற போர்கால நடவடிக்கைகளின் நியாயத்தை, கல்வி விழிப்புணர்வு பிரச்சாரங்களின் மூலமாக மாணவ சமுதாயத்திடம் எடுத்து சென்றிட கழக மாணவரணி உறுதி ஏற்கின்றது.    

கிராமப்புற மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும்  பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குடும்பங்களை சார்ந்த ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களுக்கு தரமான கல்வியின் வாயிலாக ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்துடனும் உயர்கல்வி யாருக்கும் எட்டாக்கனியாகி விடக்கூடாது என்ற உயரிய இலட்சியத்துடனும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் மாவட்டம் நெல்மேனி, துத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம், தர்மபுரி மாவட்டம் அரூர், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, விருதுநகர் மாவட்டம் சாத்துர், நாகபட்டினம் மாவட்டம் வேதாரண்யம், வேலுர் மாவட்டம் திருப்பத்துர் மற்றும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைnullண்டி ஆகிய 9 இடங்களில் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் வகுப்புகளை தொடங்கி வைத்து, மேலும் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஆகிய இரு இடங்களிலும் கலை மற்றும் அறிவியல் கல்லுரிகள் உடனே தொடங்க ஆணையிட்டு உலக தரத்திலான உயர்கல்வியை அன்னை தமிழகத்தின் மாணவ சமுதாயம் பெற்றிட வழிவகுத்து, மாணவ சமுதாயத்தின் வாழ்வில் ஒளியேற்றி வைத்திட்ட ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் கோடான கோடி நன்றி மலர்களை மாணவரணி காணிக்கையாக்குகின்றது.

இலவச சைக்கிள், இலவச பாடநுல், இலவச சீருடை, இலவச காலணி போன்ற பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பொன்னான திட்டங்களின் வரிசையிலே மாணவ  மாணவியர்கள் தங்கள் வேலைவாய்ப்பிற்கான பதிவினை தாங்கள் படித்த பள்ளிகளிலே ஆன் லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்ற வரலாற்று புரட்சியை ஏற்படுத்திய திட்டத்தை அமுல் படுத்தி, நிகழ் கல்வியாண்டிலே 27.2 இலட்சம் மாணவ மாணவியர்களுக்கு சுமார் ரூ.303.84 கோடி செலவில் இலவச பேருந்து பயண வசதி ஏற்படுத்தி கொடுத்து மாணவ சமுதாயத்தின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த ஜெயலலிதாவிற்கு கழக மாணவரணி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: