முக்கிய செய்திகள்

அமைச்சர் தலைமையில் சிட்கோ - டான்சி வளர்ச்சி பணிகள் ஆய்வு

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.21 - ஊரகத் தொழில் துறை அமைச்சர் சி.சண்முகவேலு நேற்று தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (சிட்கோ)  மற்றும் டான்சி வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வை அதன் தலைமை அலுவலகத்தில் மேற்கொண்டார். ஆய்வில் டாக்டர் டி.எஸ் ஸ்ரீதர்,  முதன்மைச் செயலர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் மோகன் பியாரே , தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், சிட்கோவும்,  ஜி.லதா , பொது மேலாளர், சிட்கோவும் மற்றும் சிட்கோ உயர் அதிகாரிகளும், 19  கிளை மேலாளர்களும் கலந்து கொண்டார்கள். மாவட்டம் முழுவதும் அமைந்துள்ள தொழிற்பேட்டைகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நில விவரங்கள் குறித்தும், காலியாக உள்ள மனைகள் குறித்தும் கிளைமேலாளர்களிடம் கேட்டறிந்தார்.  தொழிற்பேட்டைகளில் அமையப்பெற்று வரும்  உட்கட்டமைப்பு பராமரிப்பு குறித்தும் அங்கு இயங்கி வரும் தொழில் நிறுவனங்களின் உற்பத்திகள் குறித்தும், வேலை வாய்ப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்.

கிண்டி தொழிற்பேட்டையில் அமைக்கப்பட்டு வரும் சிட்கோ தலைமை அலுவலக கட்டிடத்தின் கட்டுமான பணிகள் குறித்த முன்னேற்றங்களை விரைந்து விரைவுபடுத்தவும், குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்குமாறும் பணித்தார்.

மேலும் மதியம் 12 மணியளவில் தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனத்தின் (டான்சி) செயல்பாடுகள் குறித்து ஊரக தொழில் துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் டான்சியின் முதன்மைச் செயலர் மற்றும் மேலாண் இயக்குநர் கே. அலாவுதீன் ,   உயர் அதிகாரிகளும் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். டான்சி நிறுவனம் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கினார் .

இதை ஷேர் செய்திடுங்கள்: