முக்கிய செய்திகள்

பிரிட்டனில் இந்தியர்கள் சாதனை சபாநாயகர் மீராகுமார் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

லண்டன்,ஜூலை.- 26 - பிரிட்டனில் வசிக்கும் இந்தியர்கள் ஏற்படுத்தியுள்ள சாதனைகளை இந்திய பாராளுமன்ற லோக்சபை சபாநாயகர் மீரா குமார் பாராட்டினார். காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு பாராளுமன்ற மாநாடு நேற்று லண்டனில் தொடங்கியது. மாநாடு வரும் 28-ம் தேதி வரை நடக்கிறது. மாநாட்டில் இந்திய பாராளுமன்ற லோக்சபை சபாநாயகர் மீரா குமார் தலைமையில் குழுவினர் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் 175 நாடுகளை சேர்ந்த பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய 600-க்கும் மேற்பட்ட குழுவினர் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின்போது உலக அளவில் அரசியல் பிரச்சினைகள் மற்றும் பாராளுமன்ற முறையால் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், வளர்ச்சி குறித்து விவாதமும் கருத்து பரிமாற்றங்களும் நடைபெறும். பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்த மாநாடு நடக்கிறது. இந்திய குழுவில் எம்.பி.க்கள் டாக்டர் கில்லி கிருபரானி,ஷையத் ஷாநவாஸ், அர்ஜூன் சரன் சேத்தி, முகுத் மிதி பல்பீர் புஞ்ச் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
முன்னதாக சபாநாயகர் மீரா குமாருக்கு பிரிட்டன் பாராளுமன்றம் சார்பாக விருந்து கொடுக்கப்பட்டது. விருந்தில் கலந்துகொண்டு மீரா குமார் பேசுகையில் பிரிட்டனில் வசிக்கும் இந்தியர்கள் ஆற்றிவரும் மாபெரும் பணிகளுக்கும் சாதனைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். உங்களால் இந்தியாவுக்கு பெருமையும் கெளரவமும் அதிகரித்துள்ளது. விருந்தில் பிரிட்டனின் முக்கிய தலைவர்கள் லார்டு நவ்நித் தொலாகியா, லிபரெல் ஜனநாயக கட்சி துணைத்தலைவர் உள்பட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: