முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டாலினுக்கு அ.தி.மு.க.வினர் கறுப்புக்கொடி

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

நெல்லை, ஆக.10 - பாளை. மத்திய சிறையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ள பொட்டு சுரேஷ், மதுரை குருசாமி, பூண்டி கலைவாணன் ஆகியோரை பார்க்க முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பாளை. மத்திய சிறைக்கு வந்தார். அவருடன் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், சாத்தூர் ராமச்சந்திரன், கே.என்.நேரு, பூங்கோதை, சுரேஷ்ராஜன், எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு, கீதாஜீவன், எம்.எல்.ஏ. டி.பி.எம்.மைதீன்கான், மாவட்ட செயலாளர் தூத்துக்குடி பெரியசாமி, எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், ஆகியோர் வந்தனர். 

சிறையினுள் சென்று குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள மூவரை பார்த்து விட்டு பாளை. மத்திய சிறை முன்பாக வந்த மு.க.ஸ்டாலினை வரவேற்கும் வகையில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த சிலர் மு.க.ஸ்டாலினுக்கு கறுப்புக்கொடி காட்டினர். இதனையடுத்து கூடியிருந்த தி.மு.க.வினர் அ.தி.மு.க. தொண்டர்களை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அ.தி.மு.க. தொண்டர்கள் கையில் வைத்திருந்த கறுப்புக்கொடிகளை வாங்கி தி.மு.க. தொண்டர்களிடம் கொடுத்துவிட்டு அ.தி.மு.க.வினரை அனுப்பி வைத்தனர். இதனிடையே கையில் கறுப்புக்கொடியுடன் நிற்பவர்கள் அ.தி.மு.க.வினர் என நினைத்த தி.மு.க. தொண்டர்கள் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பும், பதட்ட நிலையும் ஏற்பட்டது. இதனை அனைத்தையும் பார்த்தபடியே மு.க.ஸ்டாலின் திருச்சி புறப்பட்டு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்