முக்கிய செய்திகள்

பாகிஸ்தான் சுதந்திர தின விழா - அமெரிக்க அரசு வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஆக.14 - பாகிஸ்தானின் 64-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அந்நாட்டு அரசுக்கு அமெரிக்க அரசு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி  கிளிண்டன் கூறுகையில் பாகிஸ்தானின் நட்பு நாடாகவும் பங்காளி நாடாகவும்  அமெரிக்கா இருந்து வருகிறது என்று ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.

பாகிஸ்தானியர்கள் தங்களது சுதந்திர தினத்தை தங்களது குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் தங்களால் நேசிக்கப்படுபவர்களுடன்  கொண்டாடும் இந்த வேளையில் பாகிஸ்தானின் நண்பனாகவும் கூட்டாளியாகவும் அமெரிக்கா தொடர்ந்து இருக்கும் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் அமெரிக்க மக்கள் சார்பில் பாகிஸ்தானியர்களுக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் தான் தனது இந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைவதாகவும் ஹிலாரி கிளிண்டன் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

பாகிஸ்தானியர்களின் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் தாங்களும் இணைந்து கொள்வதாகவும் அவர் அந்த வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: