முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் வறுமைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் நரேந்திரமோடி குற்றச்சாட்டு

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

ஆமதாபாத்,ஆக.- 17 - நாட்டில் வறுமை அகலாததற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகின்றன. 50 ஆண்டுகளுக்கு மேல் மத்தியில் காங்கிரஸ் கட்சி இருந்த போதும் நாட்டை விட்டு வறுமை இன்னும் அகலவில்லை. ஆனால் ஏழைகளின் குடிசைகளுக்கு செல்வதும், அவர்களுடனும்,  அவர்கள் குழந்தைகளுடனும் புகைப்படம் எடுத்துக் கொள்வதையும் சில காங்கிரஸ் தலைவர்கள் பெருமையாக கருதுகிறார்கள். இதை அவர்கள் விளம்பரம் தேடுவதற்காக செய்கின்றனர்.
50 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி பொறுப்பில் இருந்தும் வறுமையை அகற்ற முடியாத அவர்கள் ஏழைகளுடன் புகைப்படம் எடுத்து விளம்பரம் தேடுவதை விட நாட்டில் இன்னும் வறுமை நீடிப்பதற்காக அவமானத்தில் உயிரை துறக்க வேண்டும். நாட்டில் ஏராளமானோர் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் அவல நிலை உள்ளது. இவை காங்கிரஸ் ஆட்சியின் நினைவு சின்னங்கள். இதற்காக காங்கிரசார் வெட்கப்பட வேண்டும். ஆனால் அவர்கள் வறுமையிலும், அரசியல் ஆதாயம் தேடுகின்றனர்.
குஜராத் அரசுக்கு பல்வேறு வழிகளிலும் கெட்ட பெயரை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. இதற்காக சி.பி.ஐ. போன்றவற்றை குஜராத் அரசுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது. குஜராத்தின் வளர்ச்சியை அவர்களது இத்தகைய முயற்சிகளால் தடுத்து விட முடியாது என்றார். இதனிடையே டிவிட்டர் சமூக வலைத் தளத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக அவர் எழுதியுள்ளார். ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரேவுக்கு உண்ணாவிரதம் இருக்க அனுமதி தர பிரதமர் மறுத்தார். டெல்லி போலீசாரை தொடர்பு கொள்ளவும் என்று பிரதமர் ஹசாரேவுக்கு அறிவுறுத்துகிறார். அதே நேரம் குஜராத் போலீசாரிடம் ஒழுங்கீனத்தை மத்திய அரசு உருவாக்க நினைக்கிறது என்று அவர் எழுதியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்