முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாரிகள் வேலை நிறுத்தம்: நாமக்கல்லில் 10 கோடி முட்டைகள் தேக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஆக.- 21 - நாமக்கல் பகுதியில் லாரிகள் வேலை நிறுத்தத்தால் 10 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. 

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரம், மராட்டியம், ஒரிசா ஆகிய 6 மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்தார்கள். இந்த வேலை நிறுத்தம் கடந்த 18 ம் தேதி தொடங்கியது. இதில் சில சங்கங்கள் பங்கேற்றுள்ளன. வேறு சில சங்கங்கள் பங்கேற்கவில்லை. இருந்த போதிலும் பெரும்பாலான லாரிகள் ஓடவில்லை என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் 5 லட்சம் லாரிகள் இருப்பதாகவும், இதில் 85 சதவீதம் ஓடவில்லை என்று லாரி அதிபர் சங்க கூட்டமைப்பு தலைவர் நல்லதம்பி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டை பொறுத்தவரை நாமக்கல், திருப்பூர் ஆகிய பகுதிகளில்தான் லாரிகள் அதிகளவில் ஓடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. திருப்பூர், ஈரோடு பகுதிகளில் ஜவுளி தேக்கமடைந்துள்ளது. ஈரோட்டில் ரூ. 10 கோடி மதிப்புள்ள மஞ்சள் தேங்கியுள்ளது. மஞ்சள் ஏலமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் பகுதியில் 10கோடி முட்டைகள் தேங்கியிருப்பதாக கோழிப்பண்ணை அதிபர்கள் கூறியுள்ளனர். இந்த போராட்டத்தில் டேங்கர் லாரிகள் ஈடுபடவில்லை. இதனால் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விநியோகத்தில் தடை ஏற்படவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்