முக்கிய செய்திகள்

கடாபியின் சகாப்தம் முடிகிறது: ஹிலாரி

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,ஆக.27 - லிபியாவில் அதிபர் கடாபியின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது. அதன் மூலம் லிபியாவில் புதிய சகாப்தத்திற்கு வழி பிறந்துள்ளது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் லிபியாவும் ஒன்றாகும். இது எண்ணெய் வளம் மிக்க நாடாகும். இங்கு அதிபர் கடாபி சுமார் 42 ஆண்டுகள் ஆட்சி செய்து வருகிறார். அவரின் சர்வாதிகாரப்போக்கை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தை அடக்க கடும் நடவடிக்கைகளை எடுத்தார். இது போராக உருவாகியது. கடாபிக்கும் அவரது ஆதரவு ராணுவத்திற்கும் எதிராக லிபியா மக்கள் போரில் குதித்தனர். இவர்களுக்கு அமெரிக்க கூட்டுப்படை ஆதரவு அளித்தது. எதிர்ப்பாளர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தலைநகர் திரிபோலியை கைப்பற்றிவிட்டனர். இதனால் வேறு வழியில்லாமல் அதிபர் கடாபி தப்பி, வேறு நாட்டிற்கு செல்வதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து வாஷிங்டன்னில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் லிபியாவில் குழப்பம் தொடர்ந்து நிலவுகிறது. அதேசமயத்தில் லிபியாவில் கடாபியின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது. அதன் மூலம் லிபயாவில் ஒரு புதிய சகாப்தம் உருவாக வழி பிறந்துள்ளது என்றார். லிபியாவில் நடந்த சம்பவங்கள் உலகையே அச்சுறுத்தும் வகையில் இருந்தது. லிபியாவில் சுதந்திரம், நீதி, அமைதி மீண்டும் ஏற்படும். அமெரிக்காவில் முடக்கிவைக்கப்பட்டுள்ள 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் விடுவிக்கப்படும். இந்த பணம் லிபியா நாட்டு மக்கள் நலன்களுக்காக அனுப்பிவைக்கப்படும். லிபியாவில் ஜனநாயகம் மலரவும் அங்கு அமைதி திரும்பவும் அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்றும் ஹிலாரி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: