முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரே விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டார்; அமீர்கான்

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஆக.- 29 - அன்னா ஹசாரே நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டார் என்று இந்தி நடிகர் அமீர்கான் பேசியுள்ளார். டெல்லியிலுள்ள ராம்லீலா மைதானத்தில் அன்னாஹசாரேவின் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் அன்னா ஹசாரேவை சந்திப்பதற்காக பிரபல இந்தி நடிகர் அமீர்கான் ராம்லீலா மைதானத்துக்கு வந்தார். அவருடன் திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் ஹீரானி மற்றும் பின்னணி பாடகர் சோனு நிகாம் ஆகியோரும் வந்திருந்தனர்.  நேற்றுமுன்தினம் மதியம் சுமார் 4 மணிக்கு அமீர்கான் மேடையில் காட்சியளித்தார். அவரைப் பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் மேடையை நோக்கி திரளாக வர ஆரம்பித்தனர். ஆனால் பாதுகாப்பு காரணமாக தடுப்புகள் வைக்கப்பட்டதால் மக்களால் மேடைக்கு அருகில் செல்லமுடியவில்லை. ராம்லீலா மைதானத்தில் வெயிலாக இருந்தது. அங்கு எழுச்சியுடன் கூடியிருந்த மக்கள் முன்பு சுமார் 20 நிமிடம் அமீர்கான் உரைநிகழ்த்தினார். அப்போது அவருக்கு வியர்ந்து கொட்டியது. ராம்லீலா மைதானத்தில் அமீர்கான் பேசியதாவது; அன்னா ஹசாரே நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டார். ஊழலுக்கு எதிரான இந்த போராட்டத்தில் நாம் அனைவரும் அவருடன் இணைந்துளோம். லோக்பால் மசோதாவின் அனைத்து ஷரத்துகளையும் நான் பார்த்தேன். ஜன லோக்பால் மசோதாவை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இந்த மசோதாவை பாராளுமன்றம் நிறைவேற்றும் என்று தெளிவாக தெரிகிறது. ஒரு கடுமையான லோக்பால் சட்டத்தை அவர்கள் கொண்டு வரவேண்டும். தேர்தல்கள் மற்றும் நமது வாக்குகளின் முக்கியத்துவத்தை இன்று நாம் உணர்ந்துள்ளோம். பெரும்பாலான மக்கள் வாக்களிக்கசெல்வதில்லை. ஜன லோக்பால் மசோதாவை ஆதரிக்கும்படி எங்களது எம்.பி.பிரியாதத்  இடம் நான் கேட்டுக்கொள்வேன். இதே போல் நீங்கள் அனைவரும் உங்கள் எம்.பி.க்களிடம் இந்த மசோதாவை ஆதரிக்கும் படி கூறவேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago