முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்சபையில் 80 சதவீதம் எம்.பி.க்கள் பட்டதாரிகள்-அன்னா ஹசாரே

செவ்வாய்க்கிழமை, 30 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, ஆக.- 30 - பாராளுமன்றத்தின் லோக் சபையில் 80 சதவீதம் பேர் பட்டதாரிகள் என்று லோக் சபை அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சட்டம் இயற்றும் அளவுக்கு லோக் சபை எம்.பி.க்கள் தகுதி படைத்தவர்கள் அல்ல என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே குழுவினர் கூறியுள்ளனர்.  ஆனால் லோக் சபையில் 80 சதவீதம் பேர் பட்டதாரிகள் என்றும்  முது நிலை மற்றும் டாக்டரேட் பட்டம் பெற்றவர்கள் மட்டும் 30 சதவீதம் பேர் இருக்கின்றனர் என்றும்  லோக் சபை அதிகார வட்டாரங்கள் கூறியுள்ளன. தேர்தலில் போட்டியிடுவதற்கு நமது அரசியல் சட்டத்தில் முறையான கல்வி தகுதிகள் வரையறை செய்யப்படவில்லை. இருந்தாலும்  இதுபோன்ற தேர்தல்களில் அதிக கல்வித் தகுதி இல்லாதவர்களும்கூட போட்டியிடுகின்றனர். இதெல்லாம் அனுபவ ரீதியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று லோக்சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த வாரம் அன்னா ஹசாரேவுக்காக ராம்லீலா மைதானத்தில் பேசிய  பிரபல நடிகர் ஓம்பூரி  பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் சட்டத்தை இயற்றும் அளவுக்கு  கல்வித் தகுதி உடையவர்கள் அல்ல  என்று குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் தற்போதுள்ள 15 வது பாராளுமன்றத்தின் லோக் சபையில் உள்ள எம்.பி.க்களில் எழுதப் படிக்கத்தெரியாதவர்கள் ஒருவர் கூட இல்லை என்றும் 50 சதவீத எம்.பி.க்கள்  முது நிலை பட்டதாரிகள் அல்லது இளநிலை பட்டதாரிகளாக உள்ளனர் என்றும் அந்த அதிகார வட்டாரங்கள் கூறியுள்ளன.
லோக் சபையில் 80.74 சதவீதம் எம்.பி.க்கள் பட்டதாரிகளாகவும் அதற்கும் மேலான கல்வித் தகுதியை கொண்டவர்களாகவும் இருக்கின்றனர் என்றும் இவர்களில் 24 எம்.பி.க்கள்  டாக்டர் பட்டம் பெற்றவர்கள் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
32 எம்.பி.க்கள் மெட்ரிக் பாஸ் செய்தவர்கள். 20 எம்.பி.க்கள் மெட்ரிக் படிப்புக்கு கீழே உள்ளவர்கள் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
லோக் சபையில் 291 எம்.பி.க்கள்  முதல் முதலாக இந்த சபைக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். 184 எம்.பி.க்கள் மறுமுறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
கடந்த 14 வது லோக் சபையில் 77.16 சதவீதம்  எம்.பி.க்கள்தான் பட்டதாரிகளாக இருந்தனர். ஆனால் 15 வது  லோக் சபையில் இவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony