முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தமிழர் பிரச்சனை: புதுவை சட்டசபையில் அ.தி.மு.க. வெளிநடப்பு

செவ்வாய்க்கிழமை, 30 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புதுச்சேரி, ஆக.- 30 - புதுவை சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். புதுவை சட்டசபையில் நேற்று பூஜ்ய நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் அன்பழகன் பேசினார். அவர் பேசியதாவது:- தமிழக அரசு இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்த தீர்மானத்தை பல மாநில அரசுகள் வரவேற்று உள்ளன.  இலங்கை அரசை போர் குற்றவாளியாக அறிவிக்க கோரியும் பல கட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது.  தமிழக அரசை போல புதுவை அரசும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க கூறி தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானம், ஒத்திவைப்பு மற்றும் சிறப்பு விவாதம் ஆகியவற்றிக்கு சட்டசபேரவையில் கொடுத்து இருக்கிறோம்.  ஆனால் இது தொடர்பாக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. மவுனமே சாதித்து வருகிறது. இது இலங்கை தமிழர்களுக்கு விரோதமாக இருப்பது போல சந்தேகமாக இருக்கிறது. இந்த தீர்மானத்தின் மீது அரசின் நிலை என்ன? அவகாசம் எடுத்துக் கொண்டு பதில் அளிக்க முன் வந்தால் அவகாசம் எடுத்துக் கொள்ளட்டும்.  இதற்கு ஏதாவது ஒரு பதிலை இந்த அரசு கூற வேண்டும். இல்லை எனில் இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்வதாகவும், அக்கறை இல்லாததுவாகவே கருத வேண்டி இருக்கும். இலங்கை தமிழர் படுகொலையை இந்த அரசு அங்கீகரிக்கிறதா? இவ்வாறு அவர் பேசினார்.
ஆனால் அன்பழகனின் இந்த கேள்விக்கு சபையில் யாரும் பதில் அளிக்கவில்லை. சபாநாயகர் அடுத்த அலுவலுக்கு சென்று விட்டார்.
இதையடுத்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி அன்பழகன் வெளியேறினார். அவருடன் மற்ற அ.தி.மு.க. உறுப்பினர்கள் 4 பேரும் வெளியேறினர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago