முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓடு பாதையிலிருந்து மும்பை விமானம் விலகிச் சென்றுவிபத்து

வெள்ளிக்கிழமை, 2 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

மும்பை, செப்.- 3 - துருக்கி நாட்டிலிருந்து மும்பைக்கு வந்த ஒரு விமானம் ஓடு பாதையிலிருந்து விலகிச்சென்று விபத்துக்குள்ளானது. ஆனால் அதிலிருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பினர். துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் இருந்து  97 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகளுடன் துர்க்கீஸ் ஏர்வேய்ஸ் கம்பெனிக்கு சொந்தமான ஒரு பயணிகள்  விமானம் நேற்று அதிகாலை 4.13 மணிக்கு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி  சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து தரையிறங்கியது. அப்போது எண்.8  ஓடு பாதையிலிருந்து அந்த விமானம் விலகிச்சென்று ஓடு பாதைக்கு அருகில் இருந்த சேற்றில் சிக்கியது. இதை அடுத்து பயணிகள் அனைவரும் அவசரக் கதவுகளை திறந்து கொண்டு வெளியே குதித்து உயிர் தப்பினர். என்றாலும் இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து எண். 8 ஓடு பாதையில் விமானப் போக்குவரத்து சிறிது நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடு பாதையில்  இருந்து விலகிச்சென்ற விமானத்தை மீண்டும் ஓடு பாதையில் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவத்தினால் மும்பை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இதேபோன்ற சம்பவம் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்