முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழிவாங்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்: ஹசாரே எச்சரிக்கை

திங்கட்கிழமை, 5 செப்டம்பர் 2011      ஊழல்
Image Unavailable

ரேலாகான்சிட்டி, செப்.- 5 - தனது ஆதரவாளர்களுக்கு உரிமை மீறல் நோட்டீசும் வருமானவரி நோட்டீசும் அனுப்பப்படுவதற்கு சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பழிவாங்கும் போக்கை மத்திய அரசு கைவிடாவிட்டால் நாட்டில் கலவரம் வெடிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.  பாராளுமன்றத்தில் வலுவான லோக்பால் மசோதா கொண்டுவரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் 13 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தது தெரிந்ததே. இறுதியில் அவரது கோரிக்கையின் 3 முக்கிய அம்சங்களை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு அதை நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றும் வகையில் தீர்மானம் கொண்டுவந்ததையடுத்து தனது உண்ணாவிரத போராட்டத்தை அண்ணா ஹசாரே முடித்துக்கொண்டார். இந்த போராட்டத்தின் மீது பாராளுமன்ற உறுப்பினர்களை பற்றி அவரது ஆதரவாளர்களான பிரசாந்த் பூஷண், அரவிந்த் கேஜிரிவால், கிரண்பேடி ஆகியோர் விமர்சனம் செய்து பேசினார்களாம். இதையடுத்து பிரசாந்த் பூஷண், கிரண்பேடி மற்றும் கேஜ்ரிவால் ஆகியோர்களுக்கு உரிமை மீறல் மற்றும் வருமான வரி நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளன. இதற்கு அண்ணா ஹசாரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது சொந்த கிராமத்தில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எனது குழுவை சேர்ந்தவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ், வருமானவரி நோட்டீஸ் அனுப்புகிறார்கள். இப்படி அவர்களை கொடுமைப்படுத்துவது நாட்டில் கலவரத்திற்கு வழிவகுக்கும். மத்திய அரசு தனது பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும். தவறான பாதையில் மத்திய அரசு சென்றுகொண்டியிருக்கிறது. இந்த நோட்டீஸ் அனுப்பப்படுவதற்கு என்ன காரணம் என்பது இந்த நாட்டிற்கே தெரியும். சமூக சேவை செய்யும் ஆர்வலர்களை கொடுமைப்படுத்த முயலுவது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் நோக்கம் என்ன என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். இது சமூகத்தில் பிரச்சினையை உருவாக்கும். எனவே மத்திய அரசு தனது பழிவாங்கும் நடவடிக்கையை வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அண்ணா ஹசாரே தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony