Idhayam Matrimony

லஞ்சம் கேட்கும் எம்.பி.க்களை தூக்கில் போட வேண்டும்

வியாழக்கிழமை, 8 செப்டம்பர் 2011      ஊழல்
Image Unavailable

ராலேகான்சித்தி, செப்.8 - பாராளுமன்றத்தில் கொண்டுவரும் தீர்மானங்கள், நம்பிக்கை வாக்கெடுப்புகள் ஆகியவற்றின் மீது வாக்களிக்கவோ அல்லது மக்கள் பிரச்சனை குறித்து கேள்விகேட்கவோ லஞ்சம் கேட்டும் எம்.பி.க்கள்ை தூக்கில் போட வேண்டும் என்று அன்னா ஹசாரே ஆவேசமாக தெரிவித்தார். ஊழலுக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர் சமூக சேவகர் அன்னா ஹசாரே. லோக்பால் மசோதா கொண்டுவர வேண்டும் என்பதற்காக இவர் டெல்லி ராம்லீலா மைதானத்தில் 12 நாட்கள் உண்ணா விரதத்தை மேற்கொண்டார். வெற்றிகரமாக தமது போராட்டத்தை முடித்து விட்டு தமது சொந்த கிராமமான ராலேகான்சித்திக்கு திரும்பினார் அன்னா ஹசாரே. தற்போது ஓட்டுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் அமர்சிங் உள்ளிட்ட சில எம்.பி.க்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து அன்னா ஹசாரே கருத்து  தெரிவிக்கும்போது, பாராளுமன்றத்தில் ஓட்டுக்கு லஞ்சம் பெறும் நிலை எதிர்காலத்தில் தொடராமல் இருக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். இந்த விஷயத்தில் லஞ்சம் பெறுபவர்களுக்கு தூக்கு தண்டனை கூட கொடுக்கலாம் என்பது எனது சொந்த கருத்து என்றும் அன்னா ஹசாரே தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago