முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னைக் கைது செய்யுங்கள் - அத்வானி ஆவேசம்

வெள்ளிக்கிழமை, 9 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, செப்.9 - டெல்லி ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்தது நிரூபணமாகியுள்ளது. இது தொடர்பான பா.ஜ.க.வின் திட்டத்திற்கு உத்தரவிட்டதே நான்தான். தைரியமிருந்தால் அரசு என்னைக் கைது செய்யட்டும் என்று லோக்சபையில் அத்வானி ஆவேசமாக பேசினார். பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நேற்று எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் காரணமாக பெரும் அமளி ஏற்பட்டது. லோக்சபையில் இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி பேசும்போது கூறியதாவது:-

கடந்த 2008 ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கு கோரியபோது எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்தது அரசுத் தரப்பு. இதுகுறித்து தெரியவந்ததும் எங்களது எம்.பி.க்கள் மூலம் நாங்கள் அரசுத் தரப்பை சிக்கவைக்க ஒரு திட்டத்தை தீட்டினோம். இது எனக்கு முன்பே தெரியும். ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மோசமான செயலை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் நான் அப்போது எதுவும் சொல்லவில்லை. 

பா.ஜ.க.வின் முன்னாள் எம்.பி.க்களை கைது செய்துள்ள அரசு, தைரியமிருந்தால், துணிச்சல் இருந்தால் என்னைக் கைது செய்யட்டும். நான்தான் இந்த சிக்கவைக்கும் முயற்சிக்கு காரணம். எனவே என்னைக் கைது செய்யுங்கள்.  இந்த விஷயத்தில் கைது செய்யப்பட்டுள்ள எங்கள் கட்சியின் முன்னாள் எம்.பி.க்கள் பகன்சிங் குலஸ்தே மற்றும் மகாவீர்சிங் பகோரா ஆகியோர் அப்பாவிகள் என்றார். 

லோக்சபாவில் அத்வானியின் ஆவேசப் பேச்சுக்கு காங்கிரஸ் தரப்பும், அதை எதிர்த்து பா.ஜ.க. தரப்பும் ஆவேசமாக பேசியதால் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து லோக்சபை ஒத்திவைக்கப்பட்டது. இதே நிலைதான் ராஜ்யசபையிலும் இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்