முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவமனைக்கு சென்ற ராகுலுக்கு எதிர்ப்பு

வெள்ளிக்கிழமை, 9 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி,செப்.9 - குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை பார்க்க சென்ற ராகுல் காந்தியை எதிர்த்து உறவினர்கள் கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  டெல்லி ஐகோர்ட் வாசலில் நேற்று முன்தினம் நடந்த குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் ராம்மனோகர் லோகியா, சப்தர்ஜங், எய்ம்ஸ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காயமடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அவரை பார்த்ததும் அங்கு கூடியிருந்த பொதுமக்களும், உறவினர்களும் ஆவேசமடைந்தனர். ஒவ்வொரு முறையும் குண்டு வெடித்ததும் அரசியல்வாதிகள் வந்து பார்த்து விட்டு ஆறுதல் கூறுவதோடு சரி, ஆனால் குண்டுவெடிப்பை அவர்களால் தடுக்க முடியவில்லை என்று கோஷம் எழுப்பினர். 

மேலும் ராகுல் காந்தியை பார்த்து வெட்கம் என்று குரல் எழுப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் ராகுல் காந்தி காயமடைந்தவர்களை பார்த்து விசாரித்து ஆறுதல் கூறி விட்டு சென்றார். அதன் பின்பு ஐகோர்ட்டுக்கு சென்று குண்டு வெடித்த இடத்தை நேரில் பார்வையிட்டார். ராகுல் காந்திக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் குண்டு வெடிப்பு பிரச்சினையை கிளப்பிய போது உள்துறை அமைச்சர் சிதம்பரம் மீது குற்றம் சாட்டினார்கள். பாராளுமன்றத்திற்கு வெளியேயும் எதிர்க்கட்சிகள் சிதம்பரத்தை குறை கூறினார்கள். மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் போது தீவிரவாதிகளின் சதி திட்டத்தை முன்கூட்டியே கண்டறிய அரசு தவறி விட்டது. இதில் உளவுத் துறை செயலிழந்து விட்டது. எனவே விசாரணையை தீவிரப்படுத்த வேண்டியது அவசியம் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago