முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்: முதல்வர் அறிவிப்பு

சனிக்கிழமை, 10 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.12 - விவசாயத்தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களுடன் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். தமிழக சட்டசபையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110​ன் கீழ் இரண்டு அறிக்கைகள் வெளியிட்டார். அதில் விவசாயத்துறை தொடர்பான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உண்டி கொடுத்து, உயிர் கொடுக்கும் உழவுத் தொழிலே உலகத்தின் உன்னதத் தொழில் என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.

கடவுள் என்னும் முதலாளி

கண்டெடுத்த தொழிலாளி விவசாயி !

முன்னேற்றப் பாதையிலே மனதை வைத்து

முழு மூச்சாய் அதற்காகத் தினம் உழைத்து

மண்ணிலே முத்தெடுத்துப் பிறர் வாழ

வழங்கும் குணமுடையோன் விவசாயி

என்று எம்.ஜி.ஆர். பாடியபடி, நீnullரிலே முத்தெடுக்காமல் நிலத்திலே முத்தெடுத்து ஊருக்கு உணவூட்டும் உன்னதத் தொழிலாளி தான் விவசாயி.

பயிர் வளர்த்து, உயிர் வளர்க்கும் விவசாயப் பெருமக்களின் வாழ்வு வளம் பெற எனது தலைமையிலான அரசு பல முன்னோடித் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கும், சிறு / குறு விவசாயிகளுக்கும், வாழ்க்கை முழுவதும் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு, கருவறை முதல் கல்லறை வரை பயன் அளிக்கக் கூடிய தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் என்ற சமூகப் பாதுகாப்புத் திட்டம், எனது முந்தைய ஆட்சிக்காலத்தில், 15.8.2005 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், அதன் பின்னர், 2006 ஆம் ஆண்டு, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு, இந்தத் திட்டத்திற்கு மாற்றாக, தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் ​ விவசாயிகள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலம்) சட்டம் என்ற ஒரு சட்டத்தை இயற்றியது.

இந்த நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ், ஏதாவது ஒரு இனத்தின் கீழ் உதவித் தொகையின் அளவு மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றால் கூட, சட்டமன்றத்தைக் கூட்டி, இந்தச் சட்டத்திற்கு திருத்தம் கொண்டு வந்தாக வேண்டும். இவ்வாறு, 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் ​ விவசாயிகள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலம்) சட்டம் நடைமுறைச்  சிக்கல்கள் நிறைந்ததாக இருந்ததால், அந்தச் சட்டத்தை ரத்து செய்வதற்காக, 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் ​ விவசாயிகள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலம்) நீnullக்கச் சட்டம் இந்த மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு, இதற்கான அரசு அறிவிக்கை 27.8.2011 நாளிட்ட தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டில் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வகையில், புதிய, விரிவுபடுத்தப்பட்ட, சமூக பாதுகாப்புத் திட்டம் ஒன்றை எனது தலைமையிலான அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தப் புதிய திட்டம் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் என்று அழைக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், 

(அ) 2.5 ஏக்கருக்கு மேற்படாத நன்செய் நிலம் அல்லது 5 ஏக்கருக்கு மேற்படாத புன்செய் நிலம் முதலியவற்றை உடமையாகக் கொண்டு, அந்த நிலத்தில் நேரடியாக பயிர் செய்யும், 18 வயது முதல் 65 வயதிற்கு உட்பட்ட குறு மற்றும் சிறு விவசாயிகள் மற்றும்.

(ஆ) விவசாயம் சார்ந்த தொழிலில் ஊதியத்திற்காகவோ அல்லது குத்தகை அடிப்படையிலோ ஈடுபட்டுள்ள 18 முதல் 65 வயது வரை உள்ள அனைத்து விவசாய குத்தகைதாரர்கள் / தொழிலாளர்கள் மற்றும்

(இ) இவர்களைச் சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் பயன் அடைவர்.

இத்திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில், விவசாயத் தொழிலில் ஈடுபடும் கணவன் மற்றும் மனைவி

இருவருக்கும் பண்பேறிய சிவப்பு வண்ணத்திலும், அதாவது மெரூன் வண்ணத்திலும், அவர்களைச் சார்ந்து வாழும் பிற குடும்ப உறுப்பினர்களுக்கு சாம்பல் நிறத்திலும் அடையாள அட்டைகள் வழங்கப்படும். இவ்வாறு அடையாள அட்டை பெறுபவர்கள் அனைவரும் அரசின் திட்ட உதவிகளைப் பெற தகுதி உடையவர்கள் ஆவர். இது வரை குடும்பத் தலைவருக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டு வந்த நிலை மாறி இந்தப்புதிய உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படுவதால், எவ்வித விடுபடுதலும் இன்றி, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் திட்ட உதவிகளைப் பெற வழிவகை ஏற்படும்.

விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் கல்லூரிக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில், இவர்கள் வேறு எந்த கல்வி உதவித் திட்டத்தின் கீழ் உதவி பெற்றாலும், இந்தத் திட்டத்தின் கீழும் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கு கீழ்க்கண்டவாறு உதவித் தொகைகள் வழங்கப்படும்:​

1.தொழிற்பயிற்சி நிறுவனம் (ஐ.டி.ஐ), பல்தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (பாலிடெக்னிக்) மற்றும் இதர பட்டயப் படிப்புகளுக்கு 1,250 ரூபாய் முதல் 1,950 ரூபாய் வரை ஆண்டு ஒன்றுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

2.இளங்கலை பட்டப் படிப்புகளுக்கு 1,750 ரூபாய்  முதல் 2,500 ரூபாய் வரை ஆண்டு ஒன்றுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

3.முதுகலை பட்டப் படிப்புகளுக்கு 2,250 ரூபாய்  முதல் 3,750 ரூபாய் வரை ஆண்டு ஒன்றுக்கு கல்வி

உதவித் தொகையாக வழங்கப்படும்.

4.சட்டம், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை அறிவியல் போன்ற தொழிற்கல்வி படிப்புகளுக்கு இளங்கலையில் 2,250 ரூபாய் முதல் 4,750 ரூபாய் வரையிலும், முதுகலையில் 4,250 ரூபாய் முதல் 6,750 ரூபாய் வரையிலும் ஆண்டு ஒன்றுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

2006 ஆம் ஆண்டு, முந்தைய தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத்தில், வேறு ஏதேனும் மத்திய அல்லது மாநில அரசு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை பெறப்பட்டால், இந்தத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை பெற முடியாது என்ற நிலைமை தற்போது மாற்றப்பட்டு, வேறு திட்டங்களின் கீழ்  கல்வி உதவித் தொகை பெற்றாலும், இந்தத் திட்டத்திலும் கல்வி உதவித் தொகை பெற இயலும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூகநலத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திருமண உதவி திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற தகுதி உள்ளவர்கள் அத்திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறுவர். அவ்வாறு திருமண உதவி திட்டங்களின் கீழ் உதவித் தொகை பெற இயலாதவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் திருமண உதவித் தொகையாக, ஆணுக்கு 8,000 ரூபாயும், பெண்ணுக்கு 10,000 ரூபாயும் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பதிவு பெற்ற உறுப்பினருக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையால் மகப்பேறு உதவிக்கென செயல்படுத்தப்படும் திட்டத்தின் மூலம் இந்த உதவித் தொகை வழங்கப்படும். மகப்பேறு உதவித் தொகையினை எளிதாகப் பெறும் வகையில் தனி வட்டாட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) மூலம் தேவையான சான்றிதழ்களை ஒருமுகப்படுத்தி வழங்க இத்திட்டத்தின் கீழ் வசதிகள் செய்து தரப்படும்.

60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மாதம் ஒன்றுக்கு 1,000 ரூபாய் ஓய்வூதியமாகப் பெறுவர்.

முந்தைய தி.மு.க. அரசால் இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ், இயற்கை மரணம் மற்றும் விபத்து போன்ற நிகழ்வுகளில் குடும்பத் தலைவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டது. அது தற்போது மாற்றப்பட்டு, ஒரு குடும்பத்தில் கணவன் மற்றும் மனைவி இருவரும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இவர்கள் இருவருக்கும் தனித் தனியே அடையாள அட்டைகள் வழங்கப்படுவதால், இந்த இருவரில் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் நிவாரணம் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் உறுப்பினரோ அல்லது அவரைச் சார்ந்தவரோ இறக்க நேரிட்டால், அந்தக் குடும்பத்திற்கு ஈமச் சடங்கிற்கான உதவித் தொகை உடனடியாக வழங்கப்படும். ஈமச் சடங்கு நிவாரணம் பெற இறப்புச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற நிபந்தனை nullக்கப்படுவதுடன், குடும்பத் தலைவர் இறந்தால் மட்டுமே ஈமச் சடங்கு நிவாரணம் வழங்கப்படும் என்ற நிபந்தனையும் தற்போது மாற்றப்பட்டுள்ளது என்பதை மன நிறைவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மாவட்ட அளவில் ஆட்சித் தலைவர்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மூலமாக செயல்படுத்தப்படும். திட்டச் செயல்பாட்டினை மேற்பார்வை இடுவதற்கு அரசு அளவில் ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் என்ற இந்த விரிவுபடுத்தப்பட்ட புதிய திட்டம், தமிழக விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு மிகுந்த பயன் அளிக்கக் கூடிய திட்டமாக இருக்கும் என்பதை மன நிறைவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்