முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில அபகரிப்பு புகார் மனுவை பரிசீலிக்க 4 பேர் கமிட்டி

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

கோவை, செப்.21 - நில அபகரிப்பு புகார் மனுக்களை பரிசீலித்து விசாரணைக்கு அனுப்ப, மாநகர போலீஸ் கமிஷனர் தலைமையில் நான்கு பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் தரப்படும் புகார் மனுக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது பற்றி கமிஷனர் அமரேஷ் புஜாரி அளித்த பேட்டி:

நில அபகரிப்பு தொடர்பான புகார்களை என்னிடமும் (கமிஷனரிடம்) தரலாம். இம்மனுக்கள் சம்பந்தப்பட்ட விசாரணை பிரிவுக்கு அனுப்பப்படும். சமீப காலமாகசிவில் தொடர்பான மனுக்கள் அதிகமாக வருகின்றன. எனவே, நில அபகரிப்பு தொடர்பான புகார் மனுக்களை பரிசீலக்க போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் (தலைமையிடம்) விவேகானந்தன், உதவி கமிஷனர் (நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு) செல்வராஜ், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு ஒவ்வொரு வாரமும் கூடி, புகார் மனுக்களை பரிசீலித்து சிவில் சம்பந்தப்பட்ட மனுக்களை தனியாக பிரித்து, புகார்தார்களை அழைத்து, கோர்ட்டில் வழக்கு தொடர அறிவுறுத்தப்படும்.

மோசடி சம்பந்தப்பட்டது என்றால் விசாரித்து, எப்.ஐ.ஆர்., நகல் வழங்கப்படும்.

கோவை மாநகர போலீசார் இது வரை 269 நில அபகரிப்பு புகார் மனுக்களை பெற்றுள்ளனர். இதில் 132 மனுக்கள் சிவில் சம்பந்தப்பட்டவை, ஏழு மனுக்கள் பிற மாவட்ட போலீஸ் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இவற்றில் 40 மனுக்கள் விசாரிக்கப்பட்டு 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 176 புகார் மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. கோவை மாநகரில் நில அபகரிப்பு புகாரின் பேரில் 7.19 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்