முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி இடைத்தேர்தல் பொறுப்பாளர்களாக 7 அமைச்சர்கள்

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப்.22 - திருச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், வைத்திலிங்கம், செல்லூர் கே.ராஜு,  ஆர்.பி.உதயகுமார், வி.செந்தில்பாலாஜி, என்.ஆர்.சிவபதி உட்பட 7 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ் நாடு சட்டமன்ற இடைத் தேர்தல்-2011, திருச்சிராப்பள்ளி (மேற்கு) சட்டமன்றத் தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள்:

13.10.2011 அன்று நடைபெற உள்ள திருச்சிராப்பள்ளி (மேற்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை முன்னிட்டு, கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக ஓ.பன்னீர்செல்வம் கழகப் பொருளாளர் - நிதித் துறை அமைச்சர், கே.ஏ. செங்கோட்டையன் கழக தலைமை நிலையச் செயலாளர் - வேளாண்மைத் துறை அமைச்சர், ஆர். வைத்திலிங்கம் தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், செல்லூர் கே.ராஜு  கூட்டுறவுத்துறை அமைச்சர், ஆர்.பி.உதயகுமார் கழக மாணவர் அணிச் செயலாளர்  - தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், வி.செந்தில்பாலாஜி கரூர் மாவட்ட கழகச் செயலாளர் - போக்குவரத்துத் துறை அமைச்சர், என்.ஆர். சிவபதி திருச்சி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் - கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, கட்சி வேட்பாளரின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.                         

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்