முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் உரையின்போது ஐ.நா.வுக்கு வெளியே சீக்கியர்கள் ஆர்பாட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், செப்.- 26 - பிரதமர் மன்மோகன் சிங் உரை நிகழ்த்தியபோது,  ஐ.நா. சபைக்கு வெளியே ஏராளமான சீக்கியர்கள் திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அமைச்சர் கமல்நாத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். ஐ.நா. சபையின் 66 வது வருடாந்திர கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் உரை நிகழ்த்தினார். அப்போது ஐ.நா. சபைக்கு வெளியே ஏராளமான சீக்கியர்கள் திரண்டு வந்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1984 ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் தற்போதைய நகர்ப்புற அமைச்சர் கமல்நாத்திற்கும் முக்கிய பங்கு இருக்கிறது என்றும், எனவே அவரை பிரதமர் மன்மோகன்சிங், பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் சீக்கியர்கள் கோஷங்களை எழுப்பினர். சீக்கியர்களுக்கான நீதி வழங்கும் குழுவைச் சேர்ந்த சீக்கியர்கள் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர். பிரான்ஸ் நாட்டில் வருகிற நவம்பர் மாதம் 2 ம் தேதி ஜி-20 நாடுகளின் உச்சிமாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொள்ள இருக்கிறார். அப்போதும் அங்கே இதேபோன்ற ஆர்பாட்டத்தை நடத்துவோம் என்று இந்த குழுவின் ஆலோசகர் குர்பத் வந்த் பன்னூன் தெரிவித்தார். சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டியவர்கள் மீது பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. சீக்கியர்களை கொலை செய்வதற்கு காரணமானவர்களுக்கு கேபினட் அமைச்சர் பதவி கொடுத்து பிரதமர் மன்மோகன்சிங் கெளரவித்துள்ளார் என்று குர்பத் வந்த் பன்னூன் குற்றம் சாட்டியுள்ளார்.

சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தினால் பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு நீதி வழங்கக் கோரி சர்வதேச அளவில் இந்த பிரச்சனையை கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளதாகவும் குர்பத் வந்த் பன்னூன் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago