முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

29 ம் தேதி தொடங்குகிறது திருப்பதி பிரம்மோற்சவம் கருடசேவையில் 5 லட்சம் பக்தர்கள் திரளுகிறார்கள்

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

நகரி,செப்.- 26 - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா வரும் 29 -ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 7 -ம் தேதி வரை நடக்கிறது. பிரம்மோற்சவத்துக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் கூறியதாவது; திருப்பதி கோவில் பிரம்மோற்சவத்தின் போது சாதாரண பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். ஏழுமலையான் வாகன சேவையையும் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வி.ஐ.பி. பிரேக் தரிசனம், சுப்ரபாத சேவை தவிர அனைத்து கட்டண சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தலைமுடி காணிக்கை 1 மணி நேரத்தில் செய்ய போதுமான வசதி செய்யப்பட்டுள்ளது.  இதற்காக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தலைமுடி காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவத்தின் போது தினமும் திருப்பதி கோவிலுக்கு 1லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள். கருடசேவையன்று 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள். எனவே அனைத்து பக்தர்களுக்கும் வழங்கும் வகையில் கூடுதலாக 5 லட்சம் லட்டுகள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago