Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் கோயிலில் 8 நாட்கள் மட்டுமே கொலு அலங்காரம்

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், செப்.- 28 - திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் இந்த ஆண்டு 8 நாட்கள் மட்டுமே கொலு அலங்காரம் நடக்கிறது. முருகப்பெருமானின் முதல் படைவீடு எனும் சிறப்புப்பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் நவராத்திரி திருவிழாவும் ஒன்று. அத்திருவிழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். முதல் 9 நாட்களுக்கு கோயில் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள விசாக கொறடு மண்டபத்தில் கோவர்த்தனாம்பிகை தினம் ஒரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 10 ம் நாள் மாலையில் சுப்பிரமணிய சுவாமி தங்க குதிரை வாகனத்தில் பசுமலை அம்பு போடும் மண்டபத்தில் எழுந்தருளி அங்கு அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அமாவாசை திதி இரண்டுபட்டு வருவதால் நவராத்திரி 9 நாட்கள் மட்டுமே நடக்கிறது என கோயில் சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர். கொலு அலங்காரம் 8 நாட்கள் மட்டுமே நடக்கிறது. நவராத்திரி தொடக்கமான இன்று ராஜராஜேஸ்வரி கொலு அலங்காரத்திலும், இரண்டாம் நாளான நாளை திருக்கல்யாண அலங்காரத்திலும், 3 ம் நாளான செப்டம்பர் 30 ம் தேதி ஊஞ்சல் அலங்காரத்திலும், 4 ம் நாளான அக்டோபர் 1 ம் தேதி மாணிக்கம் விற்ற லீலை அலங்காரத்திலும், 5 ம் நாளான அக்டோபர் 2 ம் தேதி தபசு அலங்காரத்திலும், 6 ம் நாளான அக்டோபர் 3 ம் தேதி பட்டாபிஷேகம் அலங்காரத்திலும், 7 ம் நாளான அக்டோபர் 4 ம் தேதி மகிஷாசுரவர்த்தினி அலங்காரத்திலும், 8 ம் நாளான அக்டோபர் 5 ம் தேதி சிவபூஜை கொலு அலங்காரங்களிலும் கோவர்த்தனாம்பிகை அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நவராத்திரி திருவிழா நிறைவு நாளான 9 ம் நாள் அக்டோபர் 6 ம் தேதி முருகப்பெருமான் தங்கக் குதிரை வாகனத்தில் பசுமலையில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெறும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago