முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடனை காட்டிக் கொடுத்தவர் மீது தேசத்துரோக வழக்கு

சனிக்கிழமை, 8 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், அக்.8 - பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை கண்டுபிடிக்க உதவிய டாக்டர் மீது தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது நிரூபிக்கப்பட்டால் டாக்டருக்கு பாக்.அரசு மரணதண்டனை வழங்கும் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் சகீல் அப்ரிதியை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. அவரை விடுதலை செய்யுமாறு அமெரிக்க வலியுறுத்தியதை ராணுவம் நிராகரித்துவிட்டது. பின்லேடனை அடையாளம் காண அவரது மரபணு சோதனை பற்றிய விவரத்தை அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வுக்கு கொடுத்த சகீல் அப்ரிதி தேசத்துரோக குற்றம் செய்துள்ளார் என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும் பின்லேடனின் குடும்ப உறுப்பினர்களை பிற நாட்டினரிடம் ஒப்படைக்க ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக்கொள்வதாகவும் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்