முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்தில் கலவரம் 25 பேர் பலி

புதன்கிழமை, 12 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

கெய்ரோ, அக். - 12 - எகிப்தில் கலவரம் மூண்டதில் 25 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து தலைநகர் கெய்ரோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  எகிப்தின் தென்பகுதியில் அஸ்வான் என்ற இடத்தில் கிறிஸ்தவர்கள் வழிபாட்டு தலம் ஒன்றை கட்டி வந்தனர். வீட்டை வழிபாட்டு தலமாக மாற்றி கட்டி வருவதாகவும், அதற்கு உள்ளாட்சி அமைப்பிடம் இருந்து அனுமதி பெறவில்லை என்றும் முஸ்லீம்கள் கூறினர்.  கவர்னர் அனுமதி அளித்துள்ளதாக கூறி கடிதம் ஒன்றை நாளிதழ்களில் கிறிஸ்தவர்கள் வெளியிட்டனர். அதை மறுத்த ஆளுனர், களைப்பால் இருந்த போது கடிதத்தில் கையொப்பமிட்டதாகவும், அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை நினைவு கூற முடியாது என்றும்  கூறினார். இதற்கிடையே அக்கட்டிடத்தை கடந்த வாரம் முஸ்லீம்கள் இடித்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து கிறிஸ்தவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் பல பகுதிகளுக்கும் பரவியது. இந்நிலையில் தலைநகர் கெய்ரோவில் தஹ்ரீர் சதுக்கத்தில் போராட்டத்தில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டனர். அதற்கு பாதுகாப்பு படையினர் அனுமதி தரவில்லை. கலைந்து செல்லுமாறு ராணுவத்தினர் கூறிய போதும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கலவரம் வெடித்தது. இதில் 2 பாதுகாப்பு படையினர் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர். 170 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கலவரத்தையடுத்து கெய்ரோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் இஸாம் ஷராப் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்