1Daniel-Vettori

 

பல்லேகெல்லே, மார்ச் 8 - உலக கோப்பை கிரிக்கெட் தொடரின்  லீக் போட்டி ஒன்றில் பாகிஸ்தானும், நியூசிலாந்து அணியும் மோத இருக்கின்றன. 10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் ஏ பிரிவு லீக் போட்டி ஒன்றில் 3 போட்டிகளில் தொடர் வெற்றியை பெற்றுள்ள பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. நியூசிலாந்தைப் பொறுத்தவரை இந்த போட்டி அந்த அணிக்கு மிக முக்கியமான போட்டியாகும். ஏ பிரிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி, நான்காம் இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த உலக கோப்பை போட்டித் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பாக். கேப்டன் அப்ரிடி எதிர் அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். 

நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி இலங்கையின் பல்லேகெல்லே நகரில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில்  நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் சோபிக்காவிட்டாலும் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் அப்ரிடி தலைமையில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று நியூசிலாந்து கேப்டன் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார். அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி, கடந்த மாதம்  நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது தங்கள் அணிக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்பட்டு தொடரை 3 - 2 என்ற கணக்கில் வென்றதையும் குறிப்பிட்ட வெட்டோரி, தற்போதும் பாகிஸ்தான் அணி உலக கோப்பை தொடரில் மிகச் சிறப்பான ஒரு அணியாக வலம்வந்துகொண்டிருப்பதாக தெரிவித்தார். அந்த அணியின் பந்துவீச்சு பலம் அச்சுறுத்தக்கூடிய ஒன்று என்பதையும் ஒத்துக்கொண்டார்.  அந்த அணியை எதிர்கொள்வது சற்று கடினமான ஒன்றுதான் என்றார் வெட்டோரி. அந்த அணி கனடாவிற்கு எதிராக 185 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டாலும், பாக். அணி தனது பந்துவீச்சு பலத்தால் கனடாவை எளிதாக வென்றதையும் குறிப்பிட்டார்.  ஆனாலும் தங்களது அணி வெற்றிக்காக கடுமையாக போராடும் என்றும் வெட்டோரி தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை அந்த அணியின் துவக்க வீரர்கள் மிகப் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. ஆனால் அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் முகமது ஹபீஸ் மற்றும் அஹமது ஷேஜாத் ஆகியோர் கடந்த மூன்று போட்டிகளில் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். இவர்களுடைய பார்ட்னர்ஷிப் மிக மோசமாக இருந்துவருகிறது. கென்யாவிற்கு எதிரான போட்டியில் 11 ரன்களையும், இலங்கைக்கு எதிரான போட்டியில் 28 ரன்களையும், கனடாவிற்கு எதிரான போட்டியில் 16 ரன்களை மட்டுமே இவர்கள் பார்ட்னர்ஷிப்பாக எடுத்துள்ளனர். இவர்கள் இப்படி விளையாடினாலும் இவர்கள் மேல் நம்பிக்கை வைத்து அணி நிர்வாகம் துவக்க ஆட்டக்காரர்கள் நிலையில் எந்த மாற்றத்தையும் இதுவரை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் பாக் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துவக்க வீரர்கள் இருவரில் ஹபீஸ் ஓரளவு சிறப்பாக செயல்படுகிறார். அதிலும் இவர் நியூசிலாந்துக்கு எதிரான கடந்த தொடரில் ஒரு சதம் மற்றும் 3 அரை சதங்கள் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் குப்தில் மற்றும் மெக்கலம் ஆகியோர் அதிரடியாக செயல்படும் பட்சத்தில் அந்த அணி மற்ற ஆல்ரவுண்டர்களின் உதவியுடன் பாகிஸ்தான் அணியை ஒரு கை பார்க்கலாம். கடந்த 3 போட்டிகளில் வென்றதன் மூலம் ஏற்கனவே காலிறுதி போட்டிக்கு கிட்டத்தட்ட தகுதி பெற்றுவிட்ட பாகிஸ்தானுக்கு இது அவ்வளவு முக்கிய போட்டி இல்லை. ஆனால் நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை அந்த அணிக்கு இது மிகவும் முக்கியமான போட்டியாகும். இலங்கையில் மழை அச்சுறுத்தல் வேறு அவ்வப்போது இருந்துகொண்டிருக்கிறது. இந்த மைதானத்தில் உலக கோப்பை போட்டிக்கு முன் நடக்கவிருந்த பயிற்சி ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்துள்ள நியூசிலாந்து சிறிய அணிகளான கென்யா மற்றும் ஜிம்பாப்வே அணிகளை மட்டுமே வென்றுள்ளது.  இன்று பகலிரவு போட்டியாக இந்த போட்டி நடைபெற இருக்கிறது.


Egg Paniyaram with Moringa leaves | Healthy snack ideas


சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்


மூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்


இலவச சட்ட உதவி பெறுவது எப்படி? | How To Get Free Aid| Right to Free Legal Aid


Mr & Mrs Short Film | Tamil Comedy Short Film |Short Film in Tamil | Short Film Tamil ComedyRhyme time with Shanaya - Children's Song/Rhymes for Babies, Toddlers & Kidsகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Reviewஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7அதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா? KC.பழனிச்சாமி குற்றச்சாட்டு | K C Palanisamy Exclusive Interview


இதை ஷேர் செய்திடுங்கள்: