முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,அக்.19 - காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பை விளக்குமாறு காவிரி நடுவர் மன்றத்திற்கு உத்தரவிட முடியாது என்று சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 1970-ம் ஆண்டில் இருந்து தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நதிநீர் பங்கீடு இருந்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைத்தது. நீண்டகால விசாரணைக்கு பின்னர் இடைக்கால தீர்ப்பு அளித்தது. அதில் தமிழகத்திற்கு 211 டி.எம்.சி.தண்ணீரும் கர்நாடகத்திற்கு 270 டி.எம்,சி. தண்ணீரும் காவிரியில் இருந்து பிரித்து கொடுக்க வேண்டும் என்று நடுவர் மன்றம் கூறியிருந்தது. ஆனால் அந்த அளவுக்கு தண்ணீரை கர்நாடகம் கொடுப்பதில்லை. மேலும் இந்த தீர்ப்பை மத்திய அரசு இன்னும் கெஜட்டில் வெளியிடாமல் கால தாமதம் செய்து வருகிறது. இந்தநிலையில் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு புரியாமல் இருக்கிறது. அதனால் தீர்ப்பு குறித்து நடுவர் மன்றம் விளக்கமாக கூற வேண்டும் என்று கோரி தமிழக அரசு சார்பாக கடந்த 2008-ம் ஆண்டு நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் காவிரி நடுவர் மன்றம் அளித்துள்ள தீர்ப்பு திருப்தியாக இல்லை என்று கூறி சம்பந்தப்பட்ட மாநிலங்களான தமிழகம், கேரளம், கர்நாடகம், புதுவை ஆகிய 4 மாநிலங்கள் சார்பாக தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டது. இதன் காரணமாக வழக்கு நிலுவையில் இருப்பதால் விளக்கம் தரமுடியாது என்று காவிரி நடுவர் மன்றம் கூறிவிட்டது. இதனையடுத்து தீர்ப்பு குறித்து விளக்கம் தர காவரி நடுவர் மன்றத்திற்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் தீர்ப்பு குறித்து விளக்கம் அளிக்க நடுவர் மன்றத்திற்கு உத்தரவிட முடியாது என்று கூறிவிட்டது. விளக்கம் அளிப்பது குறித்து நடுவர்மன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறிவிட்டனர். மேலும் 4 மாநிலங்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது விசாரணை வருகின்ற பிப்ரவரி மாதம் 7-ம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago