முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் விதிமுறை மீறல் - எம்.எல்.ஏ. வசந்தகுமார் மீது வழக்கு

செவ்வாய்க்கிழமை, 8 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

நெல்லை மார்ச்-8 - நெல்லை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விநியோகம் செய்யப்பட்ட பரிசு பொருட்களும், வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் வசந்த குமார். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு சொந்தமான வசந்த் அன் கோ நிறுவனம் மூலம் சமீபத்தில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்படட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கு கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ,மாணவியருக்கு அவரது நிறுவனத்தின் சார்பில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஆறுதல் பரிசாக வசந்தகுமார் எம்.எல்.ஏ.வின் உருவம் பொறித்த பேக், மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக நாங்குநேரி தொகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று திறுக்குறுங்குடி பகுதியில் உள்ள சில பள்ளிகளுக்கு சென்று போட்டிகளில் கலந்துகொண்ட மாணவ, மாணவியருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. இதனையறிந்த எதிர்கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, விதிமுறைகளை மீறி எம்.எல்.ஏ.ஒருவர் தலைமையில் பரிசுகள் வழங்கப்பட்டுவருவதாக திருக்குறுங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பள்ளி மாணவ,மாணவியருக்கு வழங்கப்பட்ட பேக்குகளையும், சான்றிதழ்களையும் பறிமுதல் சய்தனர். மேலும் முன்னதாக அந்த பகுதியில் உள்ள இரண்டு பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்ட பரிசுகளையும், சான்றிதழ்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக எம்.எல்.ஏ. வசந்தகுமார், மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த பரிசு பொருட்களை ஏற்றி சென்ற வாகனத்தையும் போலீசார் பரிமுதல் செய்தனர். இதேபோல் நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பேட்டை, நெல்லை சந்திப்பு, தச்சநல்லூர், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சுவர் விளம்பரம், மற்றும் டிஜிட்டல் பேனர்கள் வைத்த விடுதலை சிறுத்தைகள், தேவேந்திரகுல வேளாளர் மக்கள் கட்சி,இந்திய ஜனநாயக கட்சி, இந்தி யூனியன் முஸ்லிம் லீக், அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் மீது மாநகர காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதேபோல் விதிமுறைகளுக்கு புறம்பாக மருத்துவ முகாம் நடத்திய த.மு.மு.க. மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago