முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 21ம் தேதி துவங்குகிறது

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, அக்.21 - நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் நவம்பர் மாதம் 21ம் தேதியன்று துவங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் ஜன்லோக்பால் மசோதா பெரும் புயலை கிளப்பும் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு குளிர்காலக்கூட்டத்தொடரில் ஸ்பெக்ட்ரம் ஊழல் அதனைத் தொடர்ந்து மழைக்காலக்கூட்டத்தொடரில் லோக்பால் விவகாரம் ஆகியவை பெரும்புயலைக் கிளப்பின. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான குளிர்காலக் கூட்டத்தொடர் வரம் நவம்பர் 21ம் தேதியன்று துவங்கி டிசம்பர் 23ம் தேதி முடிவடைகிறது. இந்தக் கூட்டத்தொடரில் லோக்பால் பெரும் பயலை கிளப்பும் எனத் தெரிகிறது. இந்நிலையில் எடியூரப்பா விவகாரத்தை வைத்து பா.ஜ.க. வை சமாளிக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. ஆனால் அன்னா ஹசாரே குழுவினர் மீதான தாக்குதலை வைத்து காங்கிரஸ் ஆட்சியை கலைக்க பா.ஜ.க. தரப்பு தயாராகி வருகிறது. லோக்பால் விவகாரம், ஊழல் பிரச்சனைகள், தெலுங்கானா விவகாரம் உள்ளிட்ட சூடான பிரச்சனைகளை முன்வைத்து இருதரப்பும் முட்டிக்கொள்ளவுள்ளதால் இந்த கூட்டத்தொடரும் சுமூகமாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!