முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலை ஒழிப்பதில் ஒருங்கிணைந்த கொள்கை: பிரதமர்

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, அக்.22 - ஊழலை ஒழிப்பதில் ஒருங்கிணைந்த கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். சி.பி.ஐ. மற்றும் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் உரை நிகழ்த்தினார்.அப்போது அவர் கூறுகையில் அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்த கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது என்று கூறினார்.

தனியார் துறையில் நடக்கும் லஞ்ச லாவண்யங்களும் ஒரு கிரிமினல் குற்றம் என்பதை உறுதிப்படுத்த சட்டம் ஒன்று கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார்.

ஊழலுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வருவது உட்பட லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க ஐ.நா. மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு தனியார் நிறுவனங்களில் நடக்கும் லஞ்ச நடவடிக்கைகளும் ஒரு குற்றமே என்பதை உறுதி செய்ய பாராளுமன்றத்தில் ஒரு புதிய மசோதா கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தனியார் துறையில் லஞ்சத்தை ஒழிக்க சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறிய மன்மோகன் சிங்,  தனியார் துறையில் லஞ்சத்தை ஒழிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து விளக்கவில்லை.

பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களை வழங்குவதில் லஞ்ச லாவண்யத்தை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்  இது போன்ற ஒப்பந்தங்களை வழங்குவதற்கான அதிகார வரம்புகள் குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

லஞ்சத்திற்கு இடமளிக்கும் வாய்ப்புக்களை குறைத்தாலும்கூட  ஊழலை முழுவதுமாக ஒழித்து விட முடியாது என்றும் அவர் கூறினார்.

ஊழலில் ஈடுபடுவோர் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்த்தும் வகையில் சி.பி. ஐ. நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தவறிழைப்பவர்களுக்கு தகுந்த தண்டனையை பெற்றுத்தர சி.பி.ஐ. அதிகாரிகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள  வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை முழுமையாகவும் விரைவாகவும் முடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஊழல்களே இனி நடக்காத வகையில் இந்த சி.பி.ஐ. நடவடிக்கைகள்  பலமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்