முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசும்பொன் குருபூஜை விழா: 10 அமைச்சர்கள் அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

கமுதி, அக். - 31 - பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் 28,29,30 தேதிகளில் மிக சிறப்பாக நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும் கடந்த 28 ம் தேதி ஆன்மீக விழாவாகவும், 29 ம் தேதி அரசியல் விழாவாகவும், 30 ம் தேதியான நேற்று குருபூஜை விழாவாகவும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் 10 அமைச்சர்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், முனியசாமி, வைத்தியலிங்கம், செல்லூர் கே. ராஜூ, சண்முகவேலு, செந்தூர்பாண்டியன்,  கோகுல இந்திரா, உதயகுமார், சுப்பிரமணியன், அ.தி.மு.க. முன்னாள் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், ஆகியோர் தேவர் சமாதியில் அஞ்சலி செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அருண்ராய், மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான முருகன், மாவட்ட ஊராட்சி தலைவர் சுந்தரபாண்டியன், ஆர்.டி.ஓ. ராஜேஸ்வரி, கமுதி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், வழக்கறிஞர் பாலு, கமுதி ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் மணிமுத்து, மாவட்ட கவுன்சிலர் முத்துராமலிங்கம், கமுதி ஒன்றிய கவுன்சிலர்கள் போஸ், முத்துராமலிங்கம், முதல்நாடு ஊராட்சி தலைவர் காசிநாதன், பூமிநாதன் மற்றும் ஏராளமான கட்சி பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். காவல் துறை உயர் அதிகாரிகளின் நேரடி ஏற்பாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony