முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிர அரசியலில் ஈடுபட மாட்டேன்: நடிகர் கோவிந்தா

சனிக்கிழமை, 5 நவம்பர் 2011      சினிமா
Image Unavailable

பாட்னா, நவ.5 - ஏற்கனவே அரசியலுக்கு தான் குட்பை சொல்லிவிட்டதால் மேற்கொண்டு தீவிர அரசியலில் ஈடுபட போவதில்லை என்று திரைப்பட நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான கோவிந்த திட்டவட்டமாக கூறிவிட்டார். பிரபல இந்தி திரைப்பட நடிகர் கோவிந்தா நடித்துள்ள லூட் என்ற புதிய திரைப்படம் நேற்று நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. இந்த திரைப்பட வெளியீட்டு விழா நேற்று பாட்னாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கோவிந்தா பங்கேற்றார். அப்போது அவரிடம் சில் கேள்விகள் கேட்கப்பட்டன. ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லூலு பிரசாத்தைக் காட்டிலும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை நீங்கள் அதிகம் நேசிக்கிறீர்களா என்று கேட்டதற்கு, நான் ஏற்கனவே அரசியலில் இருந்து விலகி நீண்ட காலமாகிவிட்டது. எனவே அரசியல் குறித்து என்னிடம் கேள்விகள் கேட்பதில் அர்த்தமில்லை என்று கோவிந்தா கூறினார். எனது குழந்தை பருவ காலத்திலிருந்தே பீகார் மக்களோடு எனக்கு பலமான பந்தம் இருக்கிறது என்றும் அவர் கூறினார். தான் தீவிர அரசியலில் ஈடுபடபோவதில்லை என்றும் தனக்கு அரசியலில் போதுமான அனுபவம் இல்லை என்றும் அவர் கூறினார். நடிகராக இருந்த இவர் மும்பை வடக்கு எம்.பி தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் இப்போது எம்.பி.யாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony