அணுமின் கழக தலைவர்கள் அரசுடன் ஆலோசனை

Image Unavailable

 

சென்னை, நவ.6 - கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் தேவேந்திரநாத் திரிவேதியுடன் இந்திய அணுமின் கழக தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். தலைமை செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்திய அணுமின் கழக தலைவர் ஜெயின், இந்திய அணுமின் முகமையின் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர். அணுமின் நிலையத்தில் பெரிதாக எந்தவொரு பணிகளும் நடைபெறவில்லை என்றும், பராமரிப்பு பணிகளையாவது மேற்கொள்வது அவசியம் என்றும் அணுமின் கழக அதிகாரிகள் கூட்டத்தில் எடுத்துரைத்தனர். இந்த சூழ்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு விஷயங்கள் குறித்து தமிழக அரசிடம் அணுமின் கழக தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். 

அணுமின் நிலையம் தொடர்பாக அந்த பகுதி மக்களிடம் எழுந்துள்ள அச்ச உணர்வை போக்கிய பிறகே பணிகளை தொடங்க வேண்டும் என்று மாநில அரசு கோரியிருந்தது. இது தொடர்பான தீர்மானமும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ